சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், நெதர்லாந்து நாட்டின் மார்க் கால்ஜோவ்வை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை மார்க் கால்ஜோவ் 21-17 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதன்பின் சுதாரித்து விளையாடிய லக்ஷயா சென் இரண்டாவது செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றி தோல்வியைத் தவிர்த்தார்.
தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மார்க் கால்ஜோவ் 21-17 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி லக்ஷயா சென்னிற்கு அதிர்ச்சியளித்தார்.
இதன்மூலம் இந்தியாவின் லக்ஷயா சென் 17-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் மார்க் கால்ஜோவ்விடம் தோல்வியைத் தழுவி, ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியேறினார்.
இதையும் படிங்க: இறுதிக் கட்டத்தில் சொதப்பியதே தோல்விக்குக் காரணம் - ஈயான் மோர்கன்!