ETV Bharat / sports

காலிறுதியோடு நடையைக் கட்டிய கிடாம்பி ஸ்ரீகாந்த், சமீர் வர்மா! - kidambi srikanth

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி போட்டியில் தோல்வியடைந்து இந்திய நட்சத்திர வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சமீர் வர்மா ஆகியோர் வெளியேறினர்.

kidambi
author img

By

Published : Apr 13, 2019, 8:40 AM IST

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான ஜப்பானின் கெண்டோ மொமொடாவை எதிர்த்து ஆறாம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் களமிறங்கினார். முன்னணி வீரர்கள் மோதியதால் இந்த ஆட்டத்துக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை கெண்டோ மொமொடா 21-18 எனக் கைப்பற்ற, இரண்டாம் செட்டை இந்தியாவின் ஸ்ரீகாந்த் 19-21 எனப் போராடி கைப்பற்றினார். இதனையடுத்து முதல் நிலை வீரர் மொமொடா, தான் யார் என்பதை நிரூபிக்கும் வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, இதனை தாக்குபிடிக்க முடியாமல் ஸ்ரீகாந்த் திணறினார். இதனால் மொமொடா மூன்றாவது செட்டை 21-9 என அபாரமாகக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் மூன்றாம் நிலை வீரர் டானிஷ் வீரர் விக்டருடன் மொமொடா ஆடவிருக்கிறார்.

அதேபோல், மற்றொரு காலிறுதிப் போட்டியில் தைவான் வீரர் ஷோ டைன் சென் - ஐ எதிர்த்து இந்தியாவின் சமீர் வர்மா ஆடினார். முதல் செட்டை 10-21 என தைவான் வீரர் கைப்பற்ற, இரண்டாம் செட்டை சமீர் வர்மா 21-15 எனக் கைப்பற்றி அசத்தினார். பின்னர் மூன்றாம் செட்டில் தைவான் வீரர் 15-21 எனக் கைப்பற்றியதையடுத்து, சமீர் வர்மாவும் அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.