இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப்பை எதிர்த்து சீனா தைபை வாங் ஸூ வெய் (wang tzu vwei) எதிர்த்து ஆடினார்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய காஷ்யப் முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்ற, தொடர்ந்து ஆடிய காஷ்யப் இரண்டாவது செட்டை 21-11 என்ற நேர் செட்களில் கைப்பற்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
அரையிறுதியில், இந்தியாவின் காஷ்யப் டென்மார்க்கின் விக்டரை எதிர்த்து ஆடவுள்ளார்.