இந்திய நட்சத்திர பேட்மிண்டண் வீராங்கனை பி.வி. சிந்து. இவர் கரோனா வைரஸ் சூழலில் இருந்து வெளிவருவதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து போராடுவோம் என்ற கருத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கை ’I RETIRE’ என்ற தலைப்பில் வெளியாகியது. இதனால் பி.வி. சிந்து பேட்மிண்டன் போட்டிகளிலிருந்தே ஓய்வை அறிவித்துள்ளார் என தகவல் வெளியாகியது.
- — Pvsindhu (@Pvsindhu1) November 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Pvsindhu (@Pvsindhu1) November 2, 2020
">— Pvsindhu (@Pvsindhu1) November 2, 2020
இந்தத் தகவல் பற்றி ஈடிவி பாரத் சார்பாக பி.வி. சிந்துவின் தந்தை ரமணாவிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், ”பி.வி. சிந்து ஓய்வை அறிவிக்கவில்லை. இதுபோன்ற வதந்திகளை பரப்புவதற்கு முன்னதாக, சிந்துவின் அறிக்கையையும், ட்வீட்டையும் அனைவரும் படிக்க வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: பிவி சிந்து ஓய்வு இல்லை