பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அகானே யமகுச்சியை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் முதல் செட்டை யமகுச்சி 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதன்பின் சுதாரித்து விளையாடிய பி.வி. சிந்து 21-16, 21-19 என்ற கணக்கில் அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி அசத்தினார்.
-
Outrageous winner! 🤯 #YAE2021 pic.twitter.com/J5lmjazVno
— 🏆 Yonex All England Badminton Championships 🏆 (@YonexAllEngland) March 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Outrageous winner! 🤯 #YAE2021 pic.twitter.com/J5lmjazVno
— 🏆 Yonex All England Badminton Championships 🏆 (@YonexAllEngland) March 19, 2021Outrageous winner! 🤯 #YAE2021 pic.twitter.com/J5lmjazVno
— 🏆 Yonex All England Badminton Championships 🏆 (@YonexAllEngland) March 19, 2021
ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் பி.வி. சிந்து 16-21, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யமகுச்சியை வீழ்த்தி ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதையும் படிங்க: முதல் டி20 போட்டியிலிருந்து ஹர்மன்பிரீத் விலகல்