ETV Bharat / sports

சுவிஸ் ஓபன்: கோப்பை வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்ட சிந்து!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பி.வி. சிந்து தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

Carolina Marin beat Sindhu in straight sets to win Swiss Open

author img

By

Published : Mar 8, 2021, 12:03 PM IST

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவருகிறது. நேற்று (மார்ச்.6) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார்.

போட்டியின் தொடக்கத்திலேயே தடுமாறிய சிந்து முதல் செட்டை 12-21 என்ற கணக்கில் இழந்தார். அதன்பின் இரண்டாவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கரோலினா 21-05 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றினார்.

  • YONEX Swiss Open 2021 (New Dates)
    WS - Final
    21 21 🇪🇸Carolina MARIN🏅
    12 5 🇮🇳V. Sindhu PUSARLA

    🕗 in 35 minutes
    https://t.co/jeacFDs1Mg

    — BWFScore (@BWFScore) March 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதன் மூலம் கரோலினா மரின் 21-12, 21-05 என்ற நேர் செட் கணக்கில் பி.வி. சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றார். இப்போட்டியில் தோல்வியைத் தழுவிய சிந்து இரண்டாம் இடம்பிடித்து, கோப்பை வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

இதையும் படிங்க: மகளிர் ஒருநாள்: இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது தென் ஆப்பிரிக்கா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.