சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 12 முதல் 17ஆம் தேதி வரையும், பாங்காக் ஓபன் தொடர் ஜனவரி 19 முதல் 24ஆம் தேதி வரையும் நடத்த திட்டமிட்டுள்ளது
மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பி.டபிள்யூ.எஃப். வேர்ல்ட் ஃபைனல்ஸ் தொடர் ஜனவரி 27 முதல் 31ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
ஒலிம்பிக் தகுதி போட்டி
இந்நிலையில் இத்தொடர்களின் அடிப்படையில் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் அமையவுள்ளது.
ஏற்கெனவே கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய பேட்மிண்டர் வீரர்கள் பல்வேறு தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகின்றனர். அதனால் தற்போது நடைபெறவுள்ள பாங்காக், தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர்களுக்கான எட்டு பேர் கொண்ட இந்திய அணியை இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.
பிவி சிந்து, சாய்னா, கிடாம்பி ஸ்ரீகாந்திற்கு இடம்
அதன்படி எட்டு பேர் கொண்ட பட்டியலில் இந்தியவின் நட்சத்திர வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால், சிக்கி ரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஆகியோருக்கும், ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், சத்விக் சாய்ராஜ் ரான்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோருக்கு வாய்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியுடன் பயிற்சியாளர்களான அகஸ் டிவி சாண்டோசோ, பார்க் டே சாங் மற்றும் இரட்டையர் பயிற்சியாளர் டிவி கிறிஸ்டியவன் ஆகியோரும் பயணிக்கவுள்ளனர்.
இதையும் படிங்க:பிரிட்டீஷ் பிரீமியர் லீக் : வெற்றியுடன் தொடங்கிய முர்ரே!