புதுச்சேரியில் ஆண்டுதோறும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2019) 12-வது மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி புதுச்சேரியில் உள்ள ஆரோவா பகுதியில் இன்று (பிப்.10) நடைபெற்றது.
இதில் பெரியவர்களுக்கு 41 கி.மீ., 20 கி.மீ., 10 கி.மீ. போன்ற பிரிவுகளிலும், சிறுவர்களுக்கு 5 கி.மீ. பிரிவிலும் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.
இப்போட்டியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகம், புதுச்சேரி, வட மாநிலங்கள், ஆரோவில் உள்ளூர், வெளியூர் மக்கள் ஆகியோர் குடும்பத்துடன் வந்து இப்போட்டியில் கலந்துகொண்டனர்.
ஆரோவில் 50-வது ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி இந்த ஆண்டு மாரத்தான் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி 12-வது ஆண்டு ஆரோவில் நடைபெற்ற இப்போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.