உலகதொற்று நோயான கரோனா வைரஸை எதிர்த்து உலகமே போராடி வரும் நிலையில், கரோனா மனிதகுலத்திற்கு ஒற்றுமையை கற்றுக்கொடுத்திருப்பதாக வின் டீசலின் மகன் வின்சென்ட் சின்க்ளேர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா தொற்றுக்கு ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடி வருகின்றன. இதனால் பல்வேறு நாடுகளில் தேசிய ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் வாழ்வாதரமும் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் தன் மகன் வின்சென்ட் சின்க்ளேர் கரோனா குறித்து பேசும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் வின் டீசல், ''என் பத்து வயது மகன் தற்போது மாண்டரின் வகுப்பில் இருந்து இறங்கியுள்ளான். நானும் அவனும் இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை கூற விரும்பியுள்ளோம் என்று கூற வின் டீசலின் பின்னால் நின்ற வின்சென்ட் நீ என்ன சொல்ல விரும்புகிறார் என்று கேள்வியெழுப்பினார் வின் டீசல்.
அதற்கு வின்சென்ட், கோமிராவை பார்த்து கரோனா வைரஸ் நம்மை கடுமையாக பாதித்துள்ளது. அது நம்ம வாழ்க்கைய மிகவும் மோசமாக்கி இருக்கிறது. ஆனாலும் இந்த வைரஸ் நமக்கு ஒரு நன்மையை கற்பித்துள்ளது. ஆம், நாம் அனைவரையும் ஒற்றுமையாக இருக்கவைத்துள்ளது. உலகளாவிய ஒரே குடும்பமாக நம்மை இணைத்துள்ளது. நமக்குள் இருந்த மனிதத்தன்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது. நாம் இப்போது கரோனா குறித்து சிந்திக்காமல் இதில் இருந்து விடுபடுவது எப்படி. நாம் எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவலாம். நாம் எவ்வாறு பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் இருப்பது போன்றவற்றை கற்பித்துள்ளது என்றார்.
பின் வின் டீசல் கேமிராவை பார்து புன்னகையுடன் நாங்கள் உங்கள் அனைவரையும் நேசிக்கிறோம்''. என்று கூறி முடித்தார். இந்த வீடியோவை பதிவிட்ட வின்டீசல் சிலமணி நேரத்திலேயே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: வின் டீசலை படம் இயக்க அழைக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்