பொங்கல் தினத்தில் தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பார்வையாளர்களை கவரும் வகையில் புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்பினர்.
அந்த வகையில், 'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது' உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா விக்ரம் பிரபு - லட்சுமி மேனன் நடிப்பில் 'புலிக்குத்தி பாண்டி' என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் பொங்கலன்று நேரடியாக சன் டிவியில் வெளியானது. மேலும் இப்படம் பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பான படங்களில் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது.
பொங்கலன்று டிவியில் ஒளிபரப்பப்பட்ட சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்தைவிட 'புலிக்குத்தி பாண்டி'யை அதிகம்பேர் பார்த்துள்ளனர். இதனை விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விவரத்தை தற்போது சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.