ETV Bharat / sitara

மிரட்டல்களுக்கு மத்தியில் நீதியை நிலைநாட்டுவதே வதம்!

சென்னை: துறைரீதியான மிரட்டல்களை எதிர்கொண்டு ஐபிஎஸ் அலுவலர் சக்தி பாண்டியன் எப்படி நீதியை நிலைநாட்டுகிறார் என்பதை 'வதம்' இணையத்தொடர் அதிரடி ஆக்சனுடன் காட்டுகிறது.

vadham Web Serious
vadham Web Serious
author img

By

Published : Feb 13, 2021, 6:55 AM IST

எம்எக்ஸ் ஒரிஜினல் சீரிஸில் வெளியான முழுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள 'வதம்' இணைய தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. பத்து பகுதிகள் கொண்ட இணைய தொடராக 'வதம்' உருவாகியுள்ளது.

அப்ளாஸ் என்டர்டெய்ன்மன்ட் உடன் இணைந்து டாசா மீடியா நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். வெங்கடேஷ் பாபு இயக்கியுள்ள இந்த இணையத் தொடர் எம்எக்ஸ் பிளேயர் தளத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி இலவசமாக வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தொடரில் நடித்த நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.

தெளிவும் துணிவும் கொண்ட ஐபிஎஸ் அலுவலர் சக்தி பாண்டியனாக ஸ்ருதி ஹரிஹரன் நடித்துள்ளார். பெண் காவல்துறை குழுவுடன் இணைந்து பிரபல தொழிலதிபர் ஒருவரின் கொலையை விசாரிக்கிறார் சக்தி. கொலை வழக்கில் வெளியாகும் உண்மைகள் அவர் நினைத்தே பார்த்திராத பெரும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறது.

அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல், துறைரீதியான மிரட்டல்களை எதிர்கொண்டு எப்படி நீதியை நிலைநாட்டுகிறார் என்பதுதான் வதம். ஷ்ருதி ஹரிஹரன், அஸ்வதி வாரியர், செம்மலர், விவேக் மற்றும் திருநங்கை ப்ரீத்திஷா ப்ரேம்குமரன் ஆகியோர் நடித்துள்ளனர். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த இணையதொடருக்கு பாஸ்கரன் வசனம் எழுதியுள்ளார். பிரித்விக் இசை அமைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.