அமெரிக்காவில் புகழ் பெற்ற 'டாம் டெரிஃபிக் கார்டூன்' தொடர்களை உருவாக்கியவர் ஜீன் டீச் (Gene Deitch). இவர் 1960ஆம் ஆண்டு 'மன்ரோ' என்னும் அனிமேஷன் குறும்படத்திற்காக ஆஸ்கர் விருதை வென்றார். 2004ஆம் ஆண்டு அனிமேஷனுக்கான வாழ்நாள் பங்களிப்பிற்காக 'வின்னர் மெக்கே' விருது ஜீன் டீச்சுக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து, ஜீன் டீச் வயது மூப்பு காரணமாக செக் குடியரசின் பிராகா நகரில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.
உலகளவிய பிரபலமான கார்ட்டூன் தொடரான 'டாம் அண்ட் ஜெர்ரி' யில் 13 அத்தியாயங்களையும் 'பாப்யி தி சைலர் (Popeye the Sailor)' தொடரில் சில அத்தியாயங்களையும் ஜீன் டீச் இயக்கியுள்ளார்.
தங்களது குழந்தைப் பருவத்தை கார்ட்டூன் படங்களால் மகிழ்ச்சிகரமாக்கியதற்காக நன்றி தெரிவித்து சமூகவலைதளத்தில் ஜீன் டீச்சுக்கு நெட்டிசன்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.