சாகசம் காணுமா சாஹோ?
இயக்குநர் சுஜுத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸும் பாலிவுட் நாயகி ஷ்ரதா கபூரும் நடித்துள்ள படம் சாஹோ. யுனி கிரியேஷன் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளிவர இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளிவருகிறது.
தமிழ் சினிமா க்ரௌண்டில் சிக்ஸ்களை குவிக்குமா சிக்ஸர்?
புதுமுக இயக்குநர் சாச்சி இயக்கத்தில் வைபவ், பாலக் லால்வானி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் சிக்ஸர். இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் ஆகஸ்ட் 30 ல் திரைக்கு வெளிவர இருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் இயக்குநர் முருகதாஸ் வெளியிட்டார். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக வரும் வைபவின் குறும்புதனமான நடிப்போடு சதீஷின் காமெடியும் கலந்து கலகலப்பான திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாம்பவான் ஆகுமா ஜாம்பி?
இயக்குநர் புவன் நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், மனோபாலா, பிஜிலி' ரமேஷ், ஜான் விஜய் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'ஜாம்பி'. எஸ்3 பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 30ல் திரைக்கு வெளிவர இருக்கும் இந்த படத்தில் ஒரே இரவில் ஒரு விடுதியில் நடக்கும் சம்பவத்தைக் அடிப்படையாக கொண்டே கதை நகர்த்தப்படுகிறது.