வாஷிங்டன்: அமெரிக்க நடிகர் ஸ்டீவ் மார்டின் தான் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்டின் தனது ட்விட்டர் பக்கத்தில், நல்ல செய்தி/ கெட்ட செய்தி. நல்ல செய்தி: நான் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். கெட்ட செய்தி: எனக்கு வயது 75 என்பதால்தான் இதற்கு சம்மதித்தேன். இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. அனைவருக்கும் நன்றி, அறிவியலுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
அனைவரையும் மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தும் மார்டின், இரண்டு மாஸ்க் அணிந்து முகத்தை மூடியிருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் டிபியாக வைத்திருக்கிறார். உடல்நலக் கோளாறு இருந்தாலும் மார்டினின் நகைச்சுவை உணர்வு குறைவதில்லை என அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.