ETV Bharat / sitara

சர்வதேச திரைப்படவிழாவில் ‘சில்லுக் கருப்பட்டி’ - சர்வதேச திரைப்படவிழா

கடந்தாண்டு வெளியான அந்தாலஜி படமான சில்லு கருப்பட்டி, தற்போது சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

சர்வதேச திரைப்படவிழாவில் திரைக்காணும் ‘சில்லுக் கருப்பட்டி’

author img

By

Published : Oct 25, 2020, 2:03 PM IST

ஹலிதா சமீம் இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான திரைப்படம் ’சில்லுக் கருப்பட்டி’. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சுனைனா நடித்திருந்தார். இப்படம் நகர பின்னணியை கொண்ட நான்கு குறுங்கதைகளைக் கூறும் அந்தாலஜி வகை திரைப்படமாகும்.

மேலும், இப்படத்தில் லீலா சாம்சன், சாரா அர்ஜூன், மணிகண்டன், நிவேதிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவைன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெங்கடேஷ் வேலினி தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படம் தற்போது சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

மக்களின் பாராட்டைப் பெற்று, பல்வேறு பல விருதுகளைக் குவித்துள்ள இந்தப் படம், இப்போது ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் நவம்பர் 1ஆம் தேதி அங்கு திரையிடப்படுகிறது.

இந்தப் படத்திற்கு பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்துவரும் நிலையில், இப்பொழுது மற்றுமொரு கௌரவம் இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க...பதின் பருவத்தினரின் வாழ்வியலே 'மின்மினி' - 'சில்லுக் கருப்பட்டி' ஹலிதா ஷமீம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.