பிரபல தொலைக்காட்சித் தொடரில் 'மைனா' என்கிற பாத்திரம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை நந்தினி. அந்த தொடருக்குப் பின்னர் அவருக்குப் பல தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது.
எத்தனை சீரியல்களில் நடித்தாலும் 'மைனா' என்றே பலராலும் நந்தினி அழைக்கப்பட்டு வருகிறார். சீரியலில் நடிப்பதற்கு முன் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நந்தினிக்கு புகழைத் தேடித்தந்தது சின்னத்திரைதான்.
தற்போது நந்தினிக்கும் மற்றொரு சின்னத்திரை நடிகரான யோகேஷ்வரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதனை யோகேஷ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: 'நிசப்தம்' படத்தில் அஞ்சலிக்கு இந்த வேடமா...? இனி யாரும் தப்ப முடியாது!