ETV Bharat / sitara

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திடீர் மாற்றம்!

தெலுங்கில் ஒளிப்பரப்பாகும் 'பிக்பாஸ் 4' நிகழ்ச்சியை நாகார்ஜூனாவிற்கு பதிலாக அவரது மருமகள் சமந்தா தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார்.

பிக்பாஸ் 4
பிக்பாஸ் 4
author img

By

Published : Oct 26, 2020, 9:16 AM IST

பிரபல தொலைக்காட்சியில் தமிழில் ஒளிப்பரபாகும் ’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தமிழைப் போலவே தெலுங்கிலும் ’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழில் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது போல், தெலுங்கில் நாகார்ஜூனா தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை (அக்.24) மற்றும் நேற்று (அக்.25) ஒளிப்பரப்பான எபிசோட்களை நாகார்ஜூனாவிற்கு பதிலாக அவரது மருமகளும், நடிகையுமான சமந்தா தொகுத்து வழங்கினார். ஆட்டம், பாட்டத்துடன் சேலையில் அழகாக நடிகை சமந்தா என்ட்ரி கொடுத்து அசத்தியிருந்தார்.

சமந்தா
நடிகை சமந்தா

நடிகர் நாகார்ஜூனா தற்போது ’வைல்ட் டாக்’ படத்தின் ஷூட்டிங்கிற்குச் சென்றுள்ளதால், சமந்தா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இன்ஸ்டாவில் 5 கோடி ஃபாலோயர்களை பெற்ற ஆலியா பட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.