ETV Bharat / sitara

’ரோஜா’ தொடர் நடிகருக்கு அடித்த செம லக்! - இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்

சென்னை: இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் புதிய திரைப்படத்தில் ’ரோஜா’ தொடர் நடிகர் வெங்கட் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

வெங்கட்
வெங்கட்
author img

By

Published : Sep 24, 2020, 5:48 PM IST

பிரபல தொலைக்காட்சி தொடர்களான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ’ரோஜா’ ஆகிய தொடர்களின் நடித்தன் மூலம் பிரபலமானவர் வெங்கட் ரங்கநாதன். இந்நிலையில் இவருக்கு தற்போது விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை மகிழ்ச்சியுடன் நடிகர் வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “எஸ்.ஏ. சந்திரசேகர் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்புவந்ததும், மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் அவரைச் சந்திக்க காரணமே அவரது மனைவி ஷோபாதான். எஸ்.ஏ. சந்திரசேகர் அவரது படத்திற்கு கதாநாயகன் தேடிக்கொண்டு இருந்தபோது அவர்தான் என்னை பரிந்துரை செய்துள்ளார். இது அனைத்தும் கரோனா ஊரடங்கிற்கு முன்பு நடந்தது.

எல்லாம் சரியாக நடந்திருந்தால் இந்த நேரத்திற்குப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கும். இந்நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது. இதேபோல் ஒருநாள் தளபதி விஜய்யை நேரில் சந்திப்பேன்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாலிவுட் போதை வழக்கு: படப்பிடிப்பை நிறுத்திவிட்டு கிளம்பிய தீபிகா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.