ETV Bharat / sitara

ஆறு வயதில் நிகழ்ந்த அக்கிரமம் - 'பிக் பாஸ்' பிரபலத்தின் ஷாக் ப்ளாஷ்பேக் - Bigg Boss fame celebrities

'ராவண்' தொடரில் மன்தோதரியாகத் தோன்றி ரசிகர்கள் மனத்தில் குடிபுகுந்த நடிகை ரேஷ்மி தேசாய் வாய்ப்பு பெறுவதற்காக தான் சந்தித்த மோசமான அனுபவம், தனது காதல் வாழ்க்கையில் நிகழ்ந்த இன்னல்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

Rashmi Desai opens up on casting couch
Tv actress rashmi Desai
author img

By

Published : Mar 6, 2020, 9:39 AM IST

மும்பை: 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற டிவி நடிகை ராஷ்மி தேசாய், ஆறு வயதில் தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிரபல இணையதளம் ஒன்றுக்கு டிவி நடிகை ராஷ்மி தேசாய் பேட்டியளித்தார். அதில், தனது நடிப்பு, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்தார். அப்போது ஆறு வயதில் தனக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல் குறித்து அவர் கூறியிருப்பதாவது:

பேருந்து ஒன்றில் பயணித்தபோது உட்கார இடம் கிடைக்காமல் நின்றுகொண்டிருந்தேன். அப்போது எனது அருகே வந்த வயதான நபர், என்னை நோக்கி வந்து தவறாக நடந்துகொண்டார். அப்போது எனக்கு ஆறு வயதுதான் என்றார்.

தொடர்ந்து நடிகையாக ஆன பின்பு எனக்கு நிகழ்ந்த இதுபோன்ற மற்றொரு சம்பவம் பற்றி அவர் கூறியிருப்பதாவது:

சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாத நான் 13 ஆண்டுகளுக்கு முன்னர் நடிக்கவந்த புதிதில், திரைத் துறையில் எனக்குத் தெரிந்தவர்கள் என யாரும் கிடையாது. ஆனால் வாய்ப்புக்காக ஒத்துழைப்பு செய்தால்தான் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் எனப் பலரும் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.

சுராஜ் என்ற நபர் என்னைப் பற்றி எல்லா புள்ளிவிவரங்களைக் கேட்டார். அவர் எதற்காக இப்படிச் செய்கிறார் என அப்போது எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை சாதகமாக்கிக்கொண்டு தவறாக என்னை பயன்படுத்த முயற்சித்தார்.

உத்தரன் என்ற தொடரில் நடித்தபோது சக நடிகர் நன்திஷ் சந்து மீது காதல் வயப்பட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் மனஅழுத்தம் ஏற்பட்டு, காதலித்தவரைப் பிரிந்தேன். விவாகரத்துப் பெறக்கூடாது எனப் பலமுறை எண்ணினேன். ஆனால் இருவருக்கும் ஒத்துவராதபோது பிரிவதுதான் நல்லது என்று கூறினார்.

ராவண் என்ற தொலைக்காட்சித் தொடரில் மன்தோதரியாகத் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தார் ரேஷ்மி தேசாய். ஏராளமான போஜ்புரி மொழிப் படங்களில் நடித்துள்ள ராஷ்மி தேசாய், இந்தி, அஸ்ஸாம், குஜாராத்தி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்தாண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 13 சீசனில் மூன்றாவது இடத்தைப் பிடித்த இவர், அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மனம் கவர்ந்த போட்டியாளர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.