ETV Bharat / sitara

'நண்பர் பியர் கிரில்ஸுக்கு நன்றி' - ரஜினிகாந்த் - rajinikanth tweet thanking bear grylls for man vs wild

நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்ட 'மேன் Vs வைல்ட்' நிகழ்ச்சி இன்று மாலை 8 மணிக்கு ஒளிப்பரப்பாவதை முன்னிட்டு அதற்கு நன்றி தெரிவிக்கும்வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

rajinikanth tweet thanking bear grylls  for man vs wild program

author img

By

Published : Mar 23, 2020, 2:45 PM IST

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'மேன் Vs வைல்ட்' நிகழ்ச்சி உலகில் பலராலும் பார்த்து ரசிக்கப்பட்டுவருகிறது. காட்டிற்குச் சென்று எவ்வாறு தனியாக உயிர்பிழைப்பது என்பது குறித்து தனது சாகசங்களைப் பியர் கிரில்ஸ் செய்துகாட்டுவார்.

சமீபத்தில் பல பிரபலங்களைப் பியர் கிரில்ஸ் காட்டுப்பகுதிக்குக் கூட்டிச் சென்று எப்படிப் பிழைப்பது என்று காட்டும்விதமாக நிகழ்ச்சி அமைந்தது. இம்முறை நடிகர் ரஜினிகாந்த் கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் காட்டுக்கு பியர் கிரில்ஸுடன் சென்றிருந்தார்.

rajinikanth tweet thanking bear grylls  for man vs wild program
மேன் Vs வைல்ட்

இந்நிகழ்ச்சி இன்று டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'இது எனது வாழ்க்கையிலேயே நான் பெற்ற சாகசமான அனுபவங்களில் ஒன்று. நான் ரசித்ததைப் போலவே நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். என் நண்பன் பியர் கிரில்ஸுக்கு நன்றி' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க... பஸ் கண்டக்டர் டூ நடிகர் - பியர் கிரில்ஸுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட ரஜினி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.