லண்டன்: ஜாக் லாஃபர் என்ற டைவ் விளையாட்டு வீரர் தனது சக நண்பர்களுடன் இணைந்து, அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களில் உள்ள என்ட்ரியை புதுவிதமாக உருவாக்கியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சக்கைப் போடு போட்டது. 'அவெஞ்சர்ஸ் சீரிஸ்' படங்களில் கடைசிப் பகுதியாக வெளிவந்த இதில், வில்லன் தானோஸை ஒட்டு மொத்த அவெஞ்சர் கதாபாத்திரங்களும் சேர்த்து அழிப்பது போல் காட்டப்பட்டது.
இதில், படத்தின் இறுதிக் காட்சியில் 'அவெஞ்சர்ஸ் அசெம்பல்' என்று கூறி ஒவ்வொரு சூப்பர் ஹீரோ கேரக்டர்களும் மாஸாக என்ட்ரி கொடுப்பார்கள்.
இந்த நிலையில், அவெஞ்சர்ஸின் என்ட்ரி காட்சியைப் பிரபல டைவ் விளையாட்டு வீரரான ஜாக் லாஃபர், தனது நண்பர்களுடன் இணைந்து ரீ-கிரியேட் செய்துள்ளார்.
டாக்டர் ஸ்டெஞ்சாக ஜாக் லாஃபர், கேப்டன் அமெரிக்காவாக டேனியல் குட்ஃபெலோ, ஸ்பைடர்மேனாக ஜேம்ஸ் ஹீட்லி, அயர்ன்மேனாக மேட்டி லீ, பிளாக் பேந்தராக யோனா நைட்-விஸ்டம், லூகாஸ் தாம்ன் ஹாக்ஐ-யாகவும், கடைசியாக நோவா வில்லியம்ஸ் என்பவர் தோர் கதாபாத்திரத்தில் அந்தந்த கேரக்டர்கள் போல் தண்ணீரிலிருந்து என்ட்ரி கொடுத்துள்ளனர்.
-
Avengers assemble pic.twitter.com/x8ty5ChNWe
— Jack Laugher (@JackLaugher) October 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Avengers assemble pic.twitter.com/x8ty5ChNWe
— Jack Laugher (@JackLaugher) October 6, 2019Avengers assemble pic.twitter.com/x8ty5ChNWe
— Jack Laugher (@JackLaugher) October 6, 2019
வீடியோவில் இடம்பெறும் அனைவரும் புரொஃபஷனல் டைவர்ஸ்கள் என்பதால், படத்தில் கிராபிக்ஸாக பார்த்த காட்சி அப்படியே நிஜத்தில் செய்து மாஸ் காட்டியுள்ளனர். இந்த வீடியோவை இதுவரை சுமார் 90 ஆயிரம் பேர் வரை ரீட்வீட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: