ETV Bharat / sitara

கணவருடன் பங்குபெற்ற முதல் கேன்ஸ் விழா : நினைவுகூர்ந்த உலக அழகி - ஹாலிவுட் செய்திகள்

கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திருமணத்திற்குப் பின் முதன்முறையாக தன் கணவர் நிக் ஜோனஸுடன் பங்குபெற்ற பிரியங்கா சோப்ரா, விழா குறித்து நினைவுகூர்ந்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா
author img

By

Published : May 17, 2020, 3:37 PM IST

பிரபல பாப் பாடகரும், ஹாலிவுட் நடிகருமாக நிக் ஜோனஸைத் திருமணம் செய்து ஹாலிவுட் மருமகளாகிவிட்ட பிரபல இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் நிலையில், ஊரடங்கு தொடங்கியது முதலே சுவாரசியமான புகைப்படங்கள், காணொலிகளைப் பகிர்ந்து தன் ரசிகர்களை உற்சாகப்படுத்திவருகிறார்.

அந்த வகையில், தன் கணவர் நிக் ஜோனஸுடன் திருமணத்திற்குப் பின் தான் பங்குபெற்ற முதல் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா குறித்த காணொலி ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார். தன்னுடைய விருப்பமான புகைப்படங்கள் அடங்கிய இந்த காணொலியைப் பகிர்ந்து ”சென்ற வருடம், இதே நாள், நிக் ஜோனஸூடன் முதன் கேன்ஸ்” என குறிப்பிட்டுள்ளார்.

’கப்பிள் கோல்ஸ்’ என அழைக்கப்படும் ரசிகர்களின் விருப்ப ஜோடியான நிக் - பிரியங்கா, சென்ற வருட கேன்ஸ் விழாவில் அனைவரையும் வெகுவாக ஈர்த்தனர். குறிப்பாக ’ரெட் கார்பெட்’ என அழைக்கப்படும் சிவப்புக் கம்பள வரவேற்பின்போது நிக் - பிரியங்காவிடம் வெளிப்பட்ட கெமிஸ்ட்ரியும், சிவப்புக் கம்பள வரவேற்பின்போது மழை பெய்ததும், அழகிய வெள்ளை நிற கவுன் அணிந்து ஜொலித்த பிரியங்காவின் அழகை மழை நீர் சேதப்படுத்தி விடாமல் பாதுகாத்து நிக் அவரை அழைத்து சென்றதும் இணையத்தில் வைரலானது.

தவிர, கரோனா அவசர நிலையால் இந்த வருட விழா தடைபட்டுள்ள நிலையில், வருகிற ஜூன் மாதம் திரைப்படத் தேர்வுகள் தொடங்கி இது குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 'பெண்ணாக உங்கள் கனவுகளை நிறைவேற்றுவது உங்கள் உரிமை' - சன்னிலியோன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.