ETV Bharat / sitara

ராணுவ வீரர்களை குறிவைத்து ஆபாச காட்சிகள் - வெப்சீரிஸுக்கு எதிராக புகார்!

பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங், யூடியூப்பர் ஹிந்துஸ்தானி பாவ் ஆகியோரைத் தொடர்ந்து, முன்னாள் ராணுவ வீரரும், தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் XXX அன்சென்சார்டு 2 வெப்சீரிஸுக்கு எதிராக குர்கிராமில் புகார் அளித்துள்ளார்.

author img

By

Published : Jun 5, 2020, 7:35 PM IST

Producer Ekta kapoor
XXX uncensored 2 webseries

குர்கிராம்: ஆபாசமான காட்சிகளுடன் XXX அன்சென்சார்டு 2 வெப்சீரிஸ் இருப்பதாக, அதன் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மீது முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ராணுவத்தில் பணிபுரிபவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்துடன் XXX அன்சென்சார்டு 2 வெப்சீரிஸ் அமைந்துள்ளது. இதையடுத்து, இந்தத் தொடருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, தியாகிகள் நல அறக்கட்டளை என்ற அமைப்பு சார்பில் மேஜர் டி.சி.ராவ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகார் குறித்து அவர் கூறியதாவது, "ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தங்களது உயிரையும் தியாகம் செய்கிறார்கள். ஆனால், அவர்களின் மனைவிகள் கணவர் இல்லாமல் வீட்டில் இருக்கும் சமயங்களில் வேறொரு ஆணுடன் தவறான உறவில் இருப்பது போன்று, இந்தத் தொடரில் காட்டப்படுகிறது.

இது முற்றிலும் ஆட்சேபணத்துக்குரியது மட்டுமில்லாமல், ராணுவ வீரர்களைத் தாழ்த்தி காட்டுவதாகவும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் தவறான முத்திரைகளுடன் அவர்கள் அணியும் ஆடையும் காட்டப்படுவது ராணுவத்தினரை அசிங்கப்படுத்தவதாக உள்ளது என்றார்.

மேலும், ஹாரியானா மாநிலத்திலிருந்து சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் ராணுவத்தில் பணிபுரிகின்றனர். இதில் வரும் காட்சியமைப்புகள் தற்போது பணியிலிருக்கும் ராணுவ வீரர்கள் மட்டுமல்லாது, எங்களைப் போன்று முன்னாள் ராணுவ வீரர்களையும் அவமானப்படுத்தும் செயலாக உள்ளது.

ஆட்சேபணத்துக்குரியக் காட்சிகளைத் தயாரிப்பாளர்கள் நீக்காவிட்டால் மிகப்பெரிய எதிர்ப்பைச் சந்திக்கும் சூழல் உருவாகும் என்று கூறினார். இதையடுத்து, இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே இந்தத் தொடருக்கு எதிராக, பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங், யூடியூப்பர் ஹிந்துஸ்தானி பாவ் ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது முன்னாள் ராணுவ வீரர் ஒருவரும் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.