மூன்று தசாப்தங்களாக மல்யுத்த விளையாட்டில் கொடிகட்டிப் பறந்து வந்த ஜாம்பவான் 'த அண்டர்டேக்கர்' WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தன்னைப் பற்றிய 'அண்டர்டேக்கர்: த ஃபைனல் ரைடு' ஆவணப்படத்தின் கடைசி அத்தியாயத்தில், தனது ஓய்வு செய்தியை அவர் அறிவித்திருக்கிறார். இது குறித்து, தான் மீண்டும் ரிங்கிற்குள் செல்லாததால் நிம்மதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
'என் வாழ்க்கையில் இந்தத் தருணத்தில், மீண்டும் ரிங்கிற்குள் செல்லும் ஆசை எனக்கு இல்லை. நான் இப்போது வேறு இடத்திற்குப் பயணிக்க வேண்டிய கௌ பாய் (cowboy)ஆக உணர்கிறேன்' என்றும் அண்டர்டேக்கர் தெரிவித்துள்ளார்.
மார்க் கால்வே எனும் இயற்பெயர் கொண்ட அண்டர்டேக்கர், தன் பெயர் குறித்து ஆவணப்படத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி அத்தியாயத்தில் தெரிவித்துள்ளார்.
'நான் இங்கு ஜெயிக்கவும் சாதிக்கவும் இனி எதுவும் இல்லை. இந்த விளையாட்டு மாறி விட்டது. புதிய தோழர்கள் வர வேண்டிய நேரம் இது. இதுவே சரியான நேரம். இந்த ஆவணப்படம் இதனைக் கண்டுபிடிக்க, எனக்கு உண்மையில் உதவியுள்ளது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக WWEஇல் அவரும் ஏ.ஜே.ஸ்டைல்ஸும் கடந்த ஏப்ரல் மாதம் போட்டியிட்டனர். அதுவே, அவரது இறுதிப் போட்டியாக அமைந்தது.
இதையும் படிங்க : ஒலிம்பிக் தினத்தைக் கொண்டாட ஐஓஏ தலைவர் வேண்டுகோள்!