ETV Bharat / sitara

டிசம்பர் வார இறுதியில் இலவச சேவை வழங்கும் நெட்ஃபிளிக்ஸ்

author img

By

Published : Nov 20, 2020, 12:59 PM IST

புதுடில்லி: ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் டிசம்பர் 5-6ஆகிய இரண்டு நாள்களுக்கு இலவச சேவையை வழங்குகிறது.

Netflix
Netflix

உலகின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் சந்தையின் பெரும் பகுதியை பிடித்திருந்தாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், இந்தியர்களை கவரும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் தளம் பல்வேறு புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, ஸ்ட்ரீம் ஃபீஸ்ட் என்று அழைக்கப்படும் இரண்டு நாள் இலவச சேவையை இந்தியாவில் டிசம்பர் மாத தொடக்கத்தின் வார இறுதியான 5-6 ஆகிய தேதிகளில் வழங்குகிறது.

இதன்படி ஓடிடி தளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் netflix.com/StreamFest என்ற இணைய யுஆர்எல்லை பயன்படுத்தி இந்த சேவையை பெறலாம். ஸ்மார்ட் பயன்படுத்தும் பயனாளர்கள் இந்த இலவச சேவையை பெற தங்களது மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தொடங்கி கொள்ளலாம்.

இதில் Debit Card, Credit card போன்ற வங்கி தொடர்பான தகவல்கள் தேவையில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ கிரெக் பீட்டர்ஸ் கூறுகையில், இந்தியா போன்ற நாட்டில் வார இறுதியில் இலவச சேவைகளை வழங்குவது எங்கள் நிறுவனம் குறித்தான மதிப்பு அணுகல் பயனாளர்களுக்கு எளிதில் சென்று அடையும்.

நெட்ஃபிளிக்ஸ் ஸ்டீரிமிங்கில் உள்ள கதைகள், படங்கள், வெப்சீரிஸ் உலகத்தரம் வாய்ந்தவை. இதை இந்திய ரசிகர்களும் கண்டுகளிக்க விரும்புகிறோம். இதனால்தான் இந்த ஸ்ட்ரீம்ஃபெஸ்ட்டை நடத்துகிறோம். இதன் மூலம் எங்களுக்கு புதிய பயனாளர்கள் கிடைப்பார்கள் என நாங்கள் நிச்சயம் நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.