ஸ்பானிஷ் மொழியில் தயாராகி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சிரீஸ், மணி ஹீஸ்ட். அலெக்ஸ் ரோட்ரிகோ இயக்கிய இத்தொடர் 'ஆண்டெனா 3' என்ற ஸ்பானிய தொலைக்காட்சி சேனலில் ’லா காஸா டி பாபெல்’ என்ற பெயரில் 2017ஆம் ஆண்டு முதன்முதலில் ஒளிபரப்பானது.
கொள்ளையர்களை வழிநடத்தும் ப்ரொஃபஸர்
மொத்தம் 15 எபிசோடுகளைக் கொண்ட இத்தொடரின் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் 22 எபிசோட்களாக பிரித்து உலகமெங்கும் வெளியிட்டது. 2017ஆம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன் வசம் இழுத்துக்கொண்டுள்ளது மணி ஹீஸ்ட்.
ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் எட்டு கொள்ளையர்களையும், அவர்களை வழிநடத்தும் ப்ரொஃபஸர் என்ற ஒருவரையும் சுற்றி நடக்கும் கதைதான் மணி ஹீஸ்ட். அதுமட்டுமின்றி அத்தொடரில் இடம்பெற்ற ப்ரொஃபஸர் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.
டோக்யோ என்ற பெண்ணின் பார்வையில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. இத்தொடர் தற்போது நான்கு சீசன்களாக வெளிவந்து வெற்றியடைந்துள்ளது. மணி ஹீஸ்ட்டில் உள்ள கதாபாத்திரங்களின் நடுவே நடக்கும் காதல், கொள்ளையில் மாட்டிக்கொள்ளும் சகக் கொள்ளையர்களைக் காப்பாற்றுதல் என விறுவிறுப்பான களத்துடன் நான்கு சீசன் வரை கதை நகர்ந்துள்ளது.
மணி ஹீஸ்ட்டின் புதிய அப்டேட்
-
Vaathi's order is coming!
— Netflix India (@NetflixIndia) July 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Mark your calendars - July 7th. #NammaStoriesNammaNetflix pic.twitter.com/WD9YUK1Ole
">Vaathi's order is coming!
— Netflix India (@NetflixIndia) July 5, 2021
Mark your calendars - July 7th. #NammaStoriesNammaNetflix pic.twitter.com/WD9YUK1OleVaathi's order is coming!
— Netflix India (@NetflixIndia) July 5, 2021
Mark your calendars - July 7th. #NammaStoriesNammaNetflix pic.twitter.com/WD9YUK1Ole
இதனையடுத்து மணி ஹீஸ்ட் தொடரின் ஐந்தாவது சீசனின் முதல் பகுதி செப்டம்பர் 3 ஆம் தேதியும் இரண்டாம் பகுதி டிசம்பர் 3 ஆம் தேதியும் வெளியாகிறது. இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் இந்தியா ட்விட்டர் பக்கத்தில், ப்ரொஃபஸர் கதாபாத்திரம் வங்கி கொள்ளையடிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கும் காட்சியை ஸ்கீரின் ஷாட் எடுத்து கரும்பலகையில், லெமன் சாதம், வெஜ் பிரியாணி, தயிர் சாதம், முட்டை சாதம், குளிர்பானம், பட்டர் சிக்கன், சிக்கன் 65 என தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான சப்பாட்டு வகைகளை குறிப்பிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் ஜூலை 7ஆம் தேதி அறிவிப்பு ஒன்று வெளியாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
மணி ஹீஸ்ட் தொடரின் நான்கு சீசன்கள், வெளியாகி சில நாள்கள் கழித்து தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், மணி ஹீஸ்ட் தொடரின் 5ஆவது சீசன் வெளியாகும் தினமே தமிழ் மொழியிலும் வெளியிடப்படலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நெட்ஃபிளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்ட மணி ஹீஸ்ட்!