இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்திற்காக தனக்கே உரித்தான பாணியில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான ‘ரகிட ரகிட’ என்ற பாடல் கடந்த ஆண்டு வெளியாகி சக்கைப் போடு போட்டது. அதேசமயம் 2020ஆம் ஆண்டின் ’டாப் 5’ ட்ரெண்ட்டிங்கிலும் இடம்பெற்றது.

தற்போது இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது. பாடல்கள் நாளை (ஜூன்.07) வெளியாக உள்ள் நிலையில், அவற்றின் அதிகாரப்பூர்வ பட்டியலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தியேட்டர்ல பாக்க வேண்டிய படம்... வீட்டில் இருந்து பார்க்க போறீங்க,தாதாவின் புலம்பல்