ETV Bharat / sitara

'அது இல்லாம... என் இரவு விருந்து முழுமையடையாது' - டெய்லர் ஸ்விஃப்ட் - taylor swift lockdown activities

கரோனா அச்சத்தால் தனிமையில் இருக்கும் பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட், தனது தினசரி வாழ்க்கை எவ்வாறு செல்கிறது என்பது குறித்து கூறியுள்ளார்.

taylor swift
taylor swift
author img

By

Published : Apr 27, 2020, 2:26 PM IST

பிரபல அமெரிக்கப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் பாடல்கள் மூலம் உலகெங்கும் இருக்கும் இசை ரசிகர்களை ஈர்த்தவர். பாப் உலகின் அரசன் மைக்கேல் ஜாக்சன் அமெரிக்க இசை விருதுகள் (American Music Awards) 24ஐ பெற்றிருந்த நிலையில், டெய்லர் ஸ்விஃப்ட் 28 விருதுகளை பெற்று புதிய சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாது 10 முறை கிராமி விருதுகளையும் வென்றுள்ளார்.

கரோனா அச்சம் காரணமாக, வீட்டில் தனிமையில் இருக்கும் டெய்லர் ஸ்விஃப்ட் தனது நேரம் எவ்வாறு செல்கிறது என்பது குறித்து தற்போது கூறியுள்ளார்.

அதில், ' பழைய பாடலுடன் ஒயினை அருந்தி, உணவு அருந்தியே இரவு உணவு முழுமையடைகிறது. அதுமட்டுமல்லாது இதுவரை நான் பார்த்திராத பழைய படங்களைத் தற்போது, பார்த்து வருகிறேன். இந்த தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தில் நிறைய மக்கள் தொலைக்காட்சியில் நிறைய படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்து வருகின்றனர். நானும் பழைய படங்களைப் பார்த்து ரசித்து வருகிறேன்.

நான் இயக்குநர் ஆல்ஃபிரட் ஹிட்ச் காக் இயக்கத்தில், கிரேஸ் கெல்லி நடிப்பில் உருவான 'Rear Window' படத்தை இப்போது தான் பார்த்தேன். மிகவும் அற்புதமாக இருந்தது. அந்தப் படத்தை யாராவது பார்க்கவில்லை என்றால், தயவு செய்து பாருங்கள்’ என்றார்.

சமீபத்தில் கரோனா தொற்று தடுப்பு நிவாரண நிதிக்காக, ஏற்பாடு செய்யப்பட்ட 'ஒன் வேர்ல்ட்: டுகெதர் அட் ஹோம்' நிகழ்ச்சியில் டெய்லர் ஸ்விஃப்ட் கலந்துகொண்டார். அதுமட்டுமல்லாது இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் கிங் கான் ஷாருக்கானும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி 128 மில்லியன் அமெரிக்கன் டாலர் நிதியைத் திரட்டியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.