இந்தியாவை பூர்விகமாகக் கொண்டு இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர் ஹஸேல் கீச். தமிழில் தல அஜித் நடித்த பில்லா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன் அஜித்தை மயக்கும் விதமாக ஒரு பாடலில் கவர்ச்சி ஆட்டமும் ஆடியிருப்பார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்களில் குத்தாட்டம் போட்டவர், இந்தியில் சல்மான் கான் நடித்த 'பாடிகார்டு' படத்தில் நடித்தார். மேலும் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையே கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை காதலித்து வந்த இவர், 2016ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.
குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்த அவர், தற்போது அமிர்கான் மகள் ஐரா கான் இயக்குநராகும் மேடை நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹஸேல் கீச்-ஐ நோக்கி மண்டியிட்டு தன் கையில் இருக்கும் காகிதத்தை தருவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள ஐரா, அவர் (ஹஸேல்) சம்மதம் தெரிவித்துள்ளார். நட்பையும் தாண்டி நடிகையாக உங்களுடன் பணியாற்ற மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஐரா கான் மேடை நாடகம் ஒன்றை இயக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளார்.