ETV Bharat / sitara

சினிமாவில் கால்பதிக்கும் நடிகர் சிவாஜியின் மற்றொரு பேரன்! - cinema news

சென்னை: நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் இரண்டாவது மகன் தர்ஷன் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.

grandson of actor Sivaji
grandson of actor Sivaji
author img

By

Published : Jan 29, 2021, 7:55 AM IST

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் எழுதியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தற்போதுவரை நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது, அவரை முன்வைத்தே பாடமெடுக்கப்படுகிறது.

தற்போது நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்திலிருந்து, தனது தாத்தா வழியில் நடிப்பை கற்று திரையில் அறிமுகமாக காத்திருக்கிறார் தர்ஷன். நடிகர் திலகத்தின் மூத்த மகன் ராம்குமாரின் இரண்டாவது மகன் தான் தர்ஷன்.

நடிகர் சிவாஜியின் பேரன் தர்ஷன்
நடிகர் சிவாஜியின் பேரன் தர்ஷன்

தன் தாத்தா போல் சிறுவயது முதலே, கலை ஆர்வம் அதிகம் உள்ள தர்ஷன், நடிப்பை முறையாக கற்று நடிப்பிற்காக முழுமையாக தன்னை செதுக்கிக்கொண்டுள்ளார். இவர் கல்லூரி காலம் தொடங்கி, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மேடை நாடகங்களில் பங்காற்றிவருகிறார். டெல்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா-வில் உள்ள பேராசிரியர்களிடம் பயிற்சி பெற்றுவருகிறார்.

சபா நாடகம், தெருக்கூத்து, வீதி நாடக குழு, நாட்டுபுற நாடகம், தனி நடிப்பு, சமூக நாடகம் போன்ற செயல்பாடுகளை மும்பை, புனே மற்றும் சென்னை உள்பட இந்தியா முழுவதும் பல பகுதிகளில் நிகழ்த்தியுள்ளார். இந்தியா முழுவதும் பயணம் செய்து ஹிந்தி, தமிழ் மொழிகளில் தானே நாடக நிகழ்ச்சிகளை வடிவமைத்து நடத்தியுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இவர் நடித்து, இயக்கிய “ராவி பார்” என்ற நாடகம் விமர்சன ரீதியில் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இவர், அடுத்ததாக திரை உலகில் நுழைய தயாராகி வருகிறார். தர்ஷன் நாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இதையும் படிங்க: மக்களின் நாயகன் சசிகுமாரின் லேட்டஸ் போட்டோ ஷூட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.