லாஸ் ஏஞ்சல்ஸ்: தனியார் பத்திரிகை ஒன்று பேட்டியளித்த கெம்மா சான், இனப் பிரச்னை குறித்து நாம் பேசக்கூடாது என எண்ணுகிறேன் என தெரிவித்துள்ளார்.
எல்லி யுகே பத்திரிகையிடம் பேசிய நடிகை கெம்மா சான், பாலின பேதம், இனப் பிரச்னை குறித்து நாம் பேசக்கூடாது என எண்ணுகிறேன். அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லாத நல்ல சூழல் உருவாக வேண்டும். பெண்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது ஏன் விவாதப் பொருளாக மாறுகிறது.
‘கிரேசி ரிச் ஏசியன்ஸ்’ படத்துக்கு முன்பு எனக்கு முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளே வந்ததில்லை. குறிப்பிட்ட சிலர் மட்டுமே தொடர்ந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரை கதைக்களமாகக் கொண்ட ‘கிரேசி ரிச் ஏசியன்ஸ்’ திரைப்படம் கெம்மா சானுக்கு புகழ் வெளிச்சத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.