சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை, கதாநாயகன், குணச்சித்திரம் என அனைத்து பாத்திரங்களிலும் நடித்து வருபவர், நடிகர் யோகிபாபு. இவருக்கும் மஞ்சு பார்கவி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியைப் பெரிய அளவில் நடத்த யோகிபாபு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கரோனா தொற்றின் காரணமாக, அது நடைபெறவில்லை.
குழந்தையின் முதலாம் பிறந்தநாள்
கடந்த ஆண்டு யோகிபாபு-மஞ்சு பார்கவி தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை யோகிபாபு நேற்று கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

இவ்விழாவில் நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
மேலும் பல திரைப்பிரபலங்கள் குழந்தைக்கு தங்கள் வாழ்த்தைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: RRR Pre Release Event 'பாகுபலி சாதனையை ஆர்.ஆர்.ஆர் முறியடிக்கும்' - உதயநிதி ஸ்டாலின்