தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் கடந்த ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்தன. திரைத்துறையும் எந்தவித படப்பிடிப்புகள், பட வெளியீடு ஆகியவை இல்லாமல் முடங்கிப்போய் இருந்தது. இதனையடுத்து கரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி வழங்கியது.
ஆனாலும் சிறிய முதலீட்டு படங்களே திரையிடப்பட்டு வந்த நிலையில் ரசிகர்கள் வரவும் குறைந்து காணப்பட்டது. இதனால் பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டன.
இந்நிலையில், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ஐந்து திரைப்படங்கள் வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'யாமிருக்க பயமேன்' படத்தை இயக்கிய டிகே இயக்கத்தில் 'காட்டேரி' திரைப்படம் வெளியாக உள்ளது. வைபவ், ஆத்மிகா நடிப்பில் திகில் படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் 'யாமிருக்க பயமேன்' போன்று இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
மேலும், யுனிவர்சல் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் நடித்துள்ள 'வான்கார்டு', 'வொன்டர் வுமன்', ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'ஷகிலா' ஆகிய டப்பிங் படங்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகின்றன. தவிர, 'ராஜசிங்கம்' திரைப்படமும் வெளியாகிறது.
இதையும் படிங்க... ஓடிடியில் என்ட்ரி கொடுக்கும் விஜய் சேதுபதி, ஷாஹித்!