ETV Bharat / sitara

இசையைத் திருடிய ’ராசாத்தி’ - இயக்குநர் புலம்பல்!

சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரில் தங்களது படத்தின் இசை திருடப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.

theft
theft
author img

By

Published : Dec 26, 2019, 4:23 PM IST

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திரைப்பட இயக்குநர் ரவிச்சந்தர்,

”மாசாணி, ஐந்தாம் தலைமுறை திரைப்படங்களுக்குப் பிறகு, ’நான் அவளை சந்தித்த போது’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். மேலும், இந்தப் படத்திற்கு 17 லட்ச ரூபாய் செலவழித்து இசை அமைத்திருக்கிறேன். நாளை வெளியாகவுள்ள இப்படத்தின் பின்னணி இசையைத் திருடி சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ராசாத்தி தொடரில் பயன்படுத்தியுள்ளனர்.

இதனால், பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டு, பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் திரையிடும் சாட்டிலைட் உரிமை வியாபாரம் ஆகாமல் இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு திரைச் சங்கங்களில் புகாரளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் காவல் ஆணையரை சந்தித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு அளித்துள்ளோம்“ எனத் தெரிவித்தார்.

’ராசாத்தி’ தொடரில் என் திரைப்படத்தின் இசை - இயக்குநர் ரவிச்சந்தர்

இதையும் படிங்க: வெங்கட் பிரபுவை டார்கெட் செய்யும் அஜித் - சிம்பு ரசிகர்கள்!

Intro:Body:தனியார் தொலைகாட்சியில் (சன்டிவி)ஒளிபரப்பாகும் சீரியலில் தனது படத்தின் இசையை திருடி பதிவிட்டு உள்ளதாக படக்குழு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் எல்ஜி ரவிசந்தர்.

மாசாணி,ஐந்தாம் தலைமுறை போன்ற படத்தை இயக்கிய ரவிசந்தர் தற்போது நான் அவளை சந்தித்த போது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.மேலும் இந்த படத்திற்கு 17 லட்ச ரூபாய் செலவழித்து இசை அமைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.பின்னர் இந்த படத்திற்கு போடப்பட்டுள்ள பின்னணி இசையை திருடி சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ராசாத்தி சீரியலில் பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இதனால் பல கோடி ரூபாய் செலவு செய்து எடுத்த படம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.பின்னர் இதனால் டிவி சாட்டிலைட் உரிமை வியாபாரம் போகாமல் இருப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக திரைப்பட சங்கத்தில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால் காவல் ஆணையரை சந்தித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு அளித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பேட்டி: இயக்குனர் எல்ஜி ரவிசந்தர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.