ETV Bharat / sitara

எம்மி விருதுகள்: இந்திய இணைய தொடர்களான சேக்ரட் கேம்ஸ், லஸ்ட் ஸ்டோரிஸ் பரிந்துரை - எமி விருதுகள் பரிந்துரை பட்டியல்

வன்முறை, ஆபாச காட்சிகளால் சர்ச்சையை கிளப்பினாலும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற சேக்ரட் கேம்ஸ், லஸ்ட் ஸ்டோரிஸ், தி ரீமிக்ஸ் எம்மி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன.

இந்திய வெப் சீரிஸ் தொடர்கள் சேக்ரட் கேம்ஸ் மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ்
author img

By

Published : Sep 20, 2019, 8:34 AM IST

இந்திய ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற 'சேக்ரட் கேம்ஸ்' சிறந்த டிராமா பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு தொடரான 'லஸ்ட் ஸ்டோரில்' இரண்டு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் நடித்திருந்த நடிகை ராதிகா ஆப்தே சிறந்த நடிகை பிரிவில் பரிந்துரை பட்டியலில் உள்ளார்.

'சேக்ரட் கேம்ஸ்', 'லஸ்ட் ஸ்டோரிஸ்' ஆகிய இரு தொடர்களையும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ளார். இதையடுத்து எம்மி விருதுகளில் இவை பரிந்துரைப்பது தொடர்பான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தொடர்களை தவிர்த்து 'தி ரீமிக்ஸ்' தொடர், ஸ்கிரிப்ட் செய்யப்படாத பொழுதுபோக்குப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இயங்கிவரும் இன்டர்நேஷன் அகாதெமி ஆஃப் டிவி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் எம்மி விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இதர பொழுதுபோக்கு தொடர்களின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் இதில் இந்திய தொடர்கள் விருது பட்டியலுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தம் 11 பிரிவுகள், 21 நாடுகள், 44 பிரிவுகள் என பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மெனி, ஹங்கேரி, இந்தியா, இஸ்ரேல், நெதர்லாந்து, போர்ச்சுகல், கத்தார், சிங்கப்பூர், தென் ஆப்பரிக்கா, தென் கொரியா, துருக்கி, அமெரிக்க, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதன் வெற்றியாளர்கள் குறித்து அறிவிப்பு வரும் நவம்பர் மாதம் 25ஆம் தேதி, நியூயார்க்கில் பெரிய நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது.

நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பான 'சேக்ரட் கேம்ஸ்', 'லஸ்ட் ஸ்டோரிஸ்' தொடர்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது சேக்ரட் கேம்ஸ் சீசன் 2 ஒளிபரப்பாகிவரும் நிலையில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த இரு தொடர்களையும் இணைய ரசிகர்கள் கொண்டாடினர்.

'சேக்ரட் கேம்ஸ்' தொடரானது வன்முறை, ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக விமர்சிக்கப்பட்டாலும் ஏராளமானோர் இதனை பார்த்து ரசித்தனர்.

இதேபோல் நான்கு கதைகளின் தொகுப்பாக வெளிவந்த 'லஸ்ட் ஸ்டோரிஸ்' தொடரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தத் தொடரில் 'தோனி' படத்தில் நடித்த கியாரா அத்வானி, சுய இன்பம் அனுபவிப்பது போன்ற காட்சி சர்ச்சையைக் கிளப்பியது. ஆனாலும் இந்தியாவில் அதிகம்பேரால் பார்க்கப்பட்ட இணைய தொடர்களில் (வெப் சீரிஸ்) தொடர்களில் டாப் இடத்தைப் பிடித்தது.

இதையடுத்து அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகும் மியூசிக்கல் ரியாலிட்டி இணைய தொடராக 'தி ரீமிக்ஸ்' திகழ்கிறது. பாலிவுட் பாடல்கள் ரீமேக்ஸ் செய்து திறமையை வெளிக்காட்டும்விதமாக இந்தத் தொடர் அமைந்துள்ளது.

Intro:Body:

Netflix's popular web series Sacred Games and Lust Stories have received nominations in different categories at the 2019 International Emmy Awards.

New Delhi: The much-awaited nominations for the 2019 International Emmy Awards were announced on Thursday with Netflix's Sacred Games, Lust Stories and The Remix also receiving nominations in different categories.

While Saif Ali Khan starrer Sacred Games has been nominated in just one category for the drama series, Lust Stories has received two nominations.

The popular web series on Netflix will contend for the award in television mini-series Emmy, whereas Radhika Apte has been nominated in the best actress category for her role in 'Lust Stories'.

Filmmaker Anurag Kashyap, who helmed both the series, shared the happy news on Instagram stories while tagging his co-directors.

Other than these two, The Remix which is another Indian web television series has been put forward in the Non-Scripted Entertainment category as announced by International Academy of Television Arts & Sciences.

The nominations have been announced for 11 categories and 44 nominee for the same are from 21 countries including Argentina, Australia, Belgium, Brazil, Canada, Colombia, Finland, France, Germany, Hungary, India, Israel, the Netherlands, Portugal, Qatar, Singapore, South Africa, South Korea, Turkey, the United Kingdom & the United States.

The winners from these nominees will be declared on November 25, in a formal ceremony at the Hilton New York Hotel. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.