ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் மனத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி 'குக்வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாகப் பங்குபெற்று புகழின் உச்சிக்குச் சென்றவர் காமெடியன் புகழ். இந்த நிகழ்ச்சியில் இவரது காமெடி பெரிதும் பேசப்பட்டது.
![cooku with comali pugazh opens up on valimai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-valimai-pugazh-script-7205221_07012021141504_0701f_1610009104_950.jpeg)
அண்மையில் புகழ் 'வலிமை' திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. பல நாள்களாக அப்டேட் கேட்டு ஏமாற்றமடைந்திருந்த ரசிகர்களின் காதுகளும் இந்தச் செய்தியால் குளிர்ந்துபோயின.
தற்போது இச்செய்திக்கு மறுப்புத் தெரிவித்துள்ள புகழ், தான் சந்தானம் நடிக்கவுள்ள புதிய படத்தில்தான் அறிமுகமாகவதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க... ராஜஸ்தான் புறப்பட்டது வலிமை படக்குழு!