பிக்பாஸ் நேற்றைய எபிசோட்டில் மாரி படத்தில் இடம்பெற்றுள்ள, 'தப்பா தான் தெரியும் என்னோட ரூட்டு' என்ற பாடலுடன் தொடங்கியது. காலை தொடங்கியவுடன் பஞ்சாயத்தை தொடங்கிவிட வேண்டும் என்று நினைப்பார்கள் போல. 'இந்தவாரம் யார் வேண்டுமானாலும் தலைவராக வரட்டும்' என முனகிக் கொண்டிருந்தார்.
உடனே நிரூப் தனது தனது நாணயத்தைப் பயன்படுத்தப் போவதாக தெரிவித்தார். அவர் கடந்த சில வாரங்களாக விளிம்பில் தப்பிப்பதால் இந்த முடிவை எடுத்தார் போல.
தலைவர் டாஸ்க்
இந்தவாரத்திற்கான தலைவர் டாஸ்க்கில் இமான், அபிஷேக், சிபி ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர். இதற்காக கார்டன் ஏரியாவில் சின்ன சின்ன பெட்டிகள் இருக்கும் என்றும், அவற்றைச் சேகரித்து அடுக்க மற்றப் போட்டியார்கள் தடுக்க வேண்டும் என்றார். இதில் இறுதிவரை தாக்குப் பிடித்து இமான் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் நிரூப் தனது நாணயத்தைப் பயன்படுத்தி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
நிரூப்பை எதிர்த்த போட்டியாளர்கள்
நாணயம் பயன்படுத்தியதால் ஒவ்வொருவரின் உயரத்திற்கு ஏற்ப அவர்களிடம் குனிந்து பேச வேண்டும் என்றார் பிக்பாஸ். அணி பிரிக்கும் பகுதிக்கு வந்தார் நிரூப். நான்கு அணிகளாக பிரிக்கப்பட்ட அணிகளுக்கு அண்ணாச்சி, வருண் எதற்கும் ஒத்துக்கொள்ளவில்லை. நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என இவர்கள் நடந்து கொண்டனர்.
நீ சொல்வதைக் கேட்கமுடியாது
நாணயம் வைத்திருப்பவர்கள் தான் இதை ரூல் செய்யவேண்டும் என்றால், தலைவர் எதற்கு? என இமான் அண்ணாச்சி கேள்விக் கேட்டார். நீ சொல்வதைக் கேட்கமுடியாது என்று சிலர் நிரூப்பிடம் தெரிவித்தனர்.
உடனே பிரியங்கா, 'நீங்க தான் இந்த வீட்ல எந்த வேலையும் செய்யாமல் இருக்கீங்க' என அண்ணாச்சியை நோக்கி கேள்வி எழுப்பினார். இவர்கள் இப்படி சண்டை போட்டுக்கொண்டே இருந்ததால் இறுதியாக நிரூப் இந்த யோசனை கைவிடப்பட்டது என்றார் நிரூப். இவ்வளவு சண்டைகள் நடந்தாலும் நிரூப் தனது முகத்தைச் சாதுவாக வைத்திருந்தது சிறப்பான ஒன்று.
நாமினேஷன்
யப்பா... எப்பாடா சண்டை முடிப்பீங்க எங்களுக்கு நாமினேஷன் லிஸ்ட் வேண்டும் என நமக்கு எண்ணம் வந்திருக்கும். ஏனென்றால் அந்த அளவிற்கு இருந்தது இவர்களின் சண்டை. பொறுத்திருந்தது பார்த்த பிக்பாஸ் ஒரு கட்டத்தில் நாமினேஷனுக்கு அழைத்தார். இந்த முறை நிரூப், அமீர், சஞ்சீவ் தவீர மற்ற மூன்று நபர்களை நாமினேட் செய்ய வேண்டும் என்றார் பிக்பாஸ்.
அக்ஷரா, சிபி, பாவனி, பிரியங்கா, வருண், இமான், ராஜு, அபிஷேக், தாமரை, அபினய் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றனர். நீருப் பதவியேற்ற முதல் நாளே பல கலவரங்கள் வெடித்ததால் ரஜினி ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால், 'இனிமே தான் தரமான சம்பவங்கள் காத்திருக்கு'
இதையும் படிங்க: BB Day 57: காரசாரமான விவாதம் - வெளியேறிய ஐக்கி