பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு தங்களின் செயல்பாடுகள் அனைத்தும் மக்களுக்குக் காண்பிக்கப்படுகிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது. அதனைப் போக்கும் வகையில் நேற்று (நவம்பர் 30) டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது.
என்ன நடந்தது 59ஆவது நாள் எபிசோட்டில்
பாவனி, அபினய் விஷயத்தில் தவறாகப் பேசிய ராஜூ அவர்களிடம் அனைவரின் முன்னிலையிலும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.
பிரேக்கிங் நியூஸ்
இந்தவாரத்தின் லக்ஸரி பட்ஜெட்டாக போட்டியாளர்களுக்கு பிரேக்கிங் நியூஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. நிலம், சிவப்பு என வீடு இரண்டு அணிகளாகப் பிரிந்தது.
சிவப்பு நிற அணியில் சிபி, அபிஷேக் செய்தி வாசிப்பாளர்களாக இருக்க வருண், பிரியங்கா செய்தியாளர்களாக இருந்தனர். அதேபோல் நீல நிற அணியில் ராஜூ, இமான் செய்தி வாசிப்பாளர்கள். அக்ஷரா செய்தியாளர்களாக இருந்தனர்.
இமானை வறுத்தெடுத்த அபிஷேக்
போட்டி ஆரம்பித்த உடனேயே, சிங்கத்தின் பிடியில் ஊஞ்சலாடிய இமான், என்று அவரை சீண்டும் வகையில் வம்பிழுத்தார் அபிஷேக்.
இதனையடுத்து தலைவர் பதவியைப் பறித்த நிரூப் மீது, ஆவேசமடைந்ததற்காகக் காரணம் என்ன என அந்த குழுவில் இருந்தவர்கள் கேட்டனர். தொடர்ந்து இமானும் அபிஷேக்கும் ஆவேசமாகப் பேசுவதுடன் சிவப்பு நிற அணியின் ஆட்டம் நிறைவடைந்தது.
நீல நிற அணியின் பிரேக்கிங் நியூஸ்
அடுத்ததாக வந்த நீல நிற சேனல் நபர்கள் பிரேக்கிங் நியூஸை காமெடியாக மாற்றி சுவாரஸ்யத்தைக் கொடுத்தனர். இறுதியாக இரண்டு அணிகளையும் அலசிய சஞ்சீவ், சிவப்பு அணிக்கு 12.5 புள்ளிகளும், நீல அணிக்கு 7.5 புள்ளிகளையும் வழங்கினார்.