ETV Bharat / sitara

BB DAY 28: கொளுத்திப்போட்ட பிக்பாஸ்... மோதிக்கொண்ட நிரூப் - அபினய் - நிரூப்

பிக்பாஸ் நேற்றைய எபிசோட்டில் பரம்பர எதிரிகள்போல் நடந்துகொள்ளும் நிரூப், அபினய் மோதிக்கொண்டு வீட்டை இரண்டாக மாற்றினர்.

நிரூப் - அபினய்
நிரூப் - அபினய்
author img

By

Published : Nov 17, 2021, 2:05 PM IST

பிக்பாஸ் (Bigg Boss) ஐந்தாவது சீசன் தொடங்கி சண்டை சச்சரவுகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சுமார் 40 நாள்களுக்குப் பிறகுதான் நிகழ்ச்சியில் சூடுபிடித்திருக்கிறது என்றே சொல்லாம்.

'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்று தமிழ் பழமொழி இருக்கிறது. அந்தப் பழமொழிபோல் போட்டியாளர்களிடையே ஏற்படும் சண்டைகளைத் தன் பக்கம் சாதகமாக மாற்றி டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக்கொள்ள வேண்டும் என பிக்பாஸ் நினைத்துவிட்டார்போல. ஏனென்றால் அவர் கொடுக்கும் டாஸ்க் அனைத்தும் போட்டியாளர்களிடையே சண்டை மூட்டிவிடுவதுபோல் உள்ளது.

அதுபோன்று தான் நேற்றைய (நவம்பர் 16) நிழல் பிம்ப டாஸ்க் அமைந்திருந்தது. பரம்பர எதிரிகள்போல் நடந்துகொள்ளும் நிரூப் - அபினய், இசைவாணி - இமான், அக்ஷரா - சிபியை மோதவைத்தார் பிக்பாஸ். பாவனி- ராஜு, ஐக்கி - வருண் பிரியங்கா (Priyanka) – தாமரை ஒரு அணியாக இருந்தனர்.

எதிரிகளைக் கோத்துவிட்ட பிக்பாஸ்

பரம்பர எதிரிகளாக இருக்கும் இருவரைச் சேர்த்துவிட்டு ஒருவரைபோல் மற்றவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றார் பிக்பாஸ். மேலும் கண்ணாடி முன்பு நின்றுகொள்வதுபோல் நினைத்துக்கொண்டு தன் எதிரே நிற்கும் நபரின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் கூறினார். மேலும் சமாளிக்க முடியாமல் போட்டியிலிருந்து விலக நினைப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பேட்ஜை கழற்றிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அபினய் பொறாமை கொண்டவரா?

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டு குளீர் காய நினைத்தார் பிக்பாஸ். அவர் நினைத்தது சரியாக நடந்தது என்றே சொல்லலாம். நீருப்பை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அபினய் அவர் வளர்த்துவந்த, முடியை நறுக்கவைத்தார். இதனால் கடுப்பான நீருப், அபினய் ஒரு பொய்யான மனிதர், பொறாமைகொண்டவர் என வாய்க்குவந்ததை எல்லாம் பேசினார். இதனால் வீடு இரண்டாக மாறியது.

ராஜுவிடம் மாட்டிக்கொண்ட பாவனி

ராஜு- பாவனி
ராஜு- பாவனி

இப்படியாகச் சண்டை ஒரு பக்கம் சென்றாலும் வழக்கம்போல் ராஜு தனது நகைச்சுவையை வெளிக்காட்டினர். அவர் செய்வதைப் பாவனி அப்படியே செய்ய வேண்டும் என்பதால், ராஜு ஒடிப்பிடித்து விளையாடுவது, குதிப்பது, சண்டை போடுவது, குரங்குபோல் நடித்துக் காட்டுவது என அனைத்தையும் செய்யவைத்து வேடிக்கை காண்பித்தார்.

பிரியங்கா
பிரியங்கா

தாமரையாகவே, பிரியங்கா மாறி பிரதிபலித்தது பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தாமரைபோலவே நெற்றியில் விபூதி வைத்துக்கொண்டு அவர் நடந்துகொண்டது சுவாரஸ்யமாக இருந்தது.

அக்‌ஷராவின் குறைகளை வரிசைப்படுத்திய சிபி

அக்‌ஷரா - சிபி
அக்‌ஷரா - சிபி

நண்பர்களாக இருந்த அக்‌ஷரா (Akshara), சிபி கடந்த வாரம் முதல் எதிரிகளாக மாறியுள்ளனர். பொம்மை டாஸ்க்கில் தான் சொல்லவருவதைக் கேட்காமல், அக்‌ஷரா பேசினார். ஈகோ அதிகமாக இருக்கிறது. அவருடன் விளையாடுவது பிடிக்கவில்லை என அடுக்கடுக்காக சிபி குற்றம் சாட்டினார். நீ என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள் அதில் எனக்குச் சம்பந்தம் இல்லை என எதையும் காதில் வாங்காமல் அக்‌ஷரா நின்றுகொண்டிருந்தார்.

பெடஸ்டலை உடைத்த வருண்

ஜாலியாக ஐக்கி, அக்‌ஷரா, நிரூப்பிற்கு பாத்ரூம் ஏரியாவில் வருண் டாஸ்க் கொடுத்துக் கொண்டிருந்தார். குஷியில் ஆடிக்கொண்டே இருந்த வருண் எதிர்பாராதவிதமாக, தனது நெருப்பு நாணயம் வைத்திருக்கும் பெடஸ்டலை கீழே தள்ளி உடைத்துவிடுவதுடன் நேற்றைய டாஸ்க் நிறைவடைந்தது.

இதையும் படிங்க: BB DAY 28: கன்டெண்ட் இல்லாமல் திணறும் பிக்பாஸ்.... கமல் ஹாசன் டாஸ்க்கில் நடக்கப் போவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.