ETV Bharat / sitara

’பிக்பாஸ் 4’ தொடங்கும் தேதி வெளியீடு! - bigg boss 4 from october 4

’பிக்பாஸ்’ நான்காவது சீசன் ஒளிபரப்பாகவுள்ள தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 4
பிக்பாஸ் 4
author img

By

Published : Sep 24, 2020, 7:17 PM IST

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே மூன்று சீசன்கள் நடந்துமுடிந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் தொடங்கவுள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு, கரோனா ஊரடங்கு காரணமாக தாமதமாகியுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’பிக்பாஸ் 4’ சீசன் அக்டோபர் 4ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் மாலை 6 மணிக்கும், மற்ற நாள்களில் இரவு 9.30மணிக்கும் ஒளிப்பரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்கப் போகிறார்கள் என்று போட்டியாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியாகாத நிலையில், பலரும் தங்களது யூகங்களையும், கருத்துகளையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’ரோஜா’ தொடர் நடிகருக்கு அடித்த செம லக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.