ETV Bharat / sitara

அனிதா சம்பத்தை கண்கலங்க வைத்த அறந்தாங்கி நிஷா! - anitha sampath in bb4

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 இரண்டாவது ப்ரோமோவில் அறந்தாங்கி நிஷாவை போல் எனது அம்மா இருக்கவேண்டும் என்று அனிதா சம்பத் கண்கலங்கி பேசியுள்ளார்.

அனிதா
அனிதா
author img

By

Published : Oct 6, 2020, 2:08 PM IST

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கிய நாளன்றே பலரும் ஷிவானியை டார்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அவர் யாரிடமும் பழக முயற்சி செய்யவில்லை என்று போட்டியாளர்கள் அனைவரும் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் இன்றைக்கான(அக்.06) இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அனிதா சம்பத், நிஷாவை பார்க்கும்போது தன்னுடைய அம்மாவை பார்ப்பது உள்ளது என்று கூறி அழுகிறார்.

இதுகுறித்து வெளியான வீடியோவில், “எங்க அம்மாவும் நிஷா அக்கா போலதான் டார்க்காக இருப்பார். அதனாலேயே அவர் எந்த நகையும் அணியமாட்டார். அதுமட்டுமின்றி என்னுடன் பள்ளி ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பிற்கும் வரமாட்டார்.

ஆனால் நிஷா தனது டார்க் ஸ்கின் டோனை நகைச்சுவைக்காக எடுத்துக்கொண்டு சாதித்து காண்பித்துள்ளார். என் அம்மாவும் நிஷாவிடம் இருந்து இதை கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அழுதபடி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ’எதற்காக தினமும் வீடியோ வெளியிடுகிறீர்கள்?’ - ஷிவானியை மடக்கி கேள்வி கேட்ட ஆரி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.