ETV Bharat / sitara

'போருக்குச் செல்வதைப்போல் உள்ளது' - படப்பிடிப்பில் கலந்துகொண்ட காபி நடிகை - விளம்பர படப்பிடிப்பில் பங்குபெற்ற அதா சர்மா

நடிகை அதா சர்மா ஊரடங்கு தளர்த்திய பிறகு விளம்பரம் ஒன்றுக்கான படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதையடுத்து அதில் பங்குபெற்றது 'போருக்குச் செல்வதைபோல உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

Adah Sharma goes to shooting after lockdown

author img

By

Published : Jun 25, 2020, 2:58 PM IST

காபி விளம்பரம் மூலம் நன்கு பரிட்சயமான நடிகை அதா சர்மா. கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு தனது பணியை மீண்டும் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்ட அதா சர்மா, "செட்டுக்கு வந்தாயிற்று. ஊரடங்கு தளர்த்திய பிறகு நடக்கும் எனது முதல் படப்பிடிப்பு. கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்ட 20 பேர் கொண்ட குழுவுடன், முகக்கவசம் அணிந்து புதிய விளம்பரம் ஒன்றுக்கு படப்பிடிப்பு நடக்கிறது.

நாங்கள் அனைவரும் போருக்குச் செல்வதுபோல் உள்ளது. ஆனால், அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்கிறோம், 'கரோனா'வை எதிர்த்து. காணொலிகளை பகிர்கிறோம். காத்திருங்கள்" என்று தெரிவித்தார்.

இதனிடையே, அதா சர்மா ஆணாக நடிக்கும் 'மேன் டு மேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

இதையும் படிங்க... காஸ்டிங் கோச் குறித்த தகவலை பகிர்ந்த அடா சர்மா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.