கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதையடுத்து, தற்போது 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இருப்பினும், பலரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 'சித்தி 2' தொடரில் நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளதாக, நடிகை ராதிகா தனது ட்விட்டரில் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியதாவது, "சித்தி 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. உடல்நலக் குறைவு காரணமாக, சில நடிகர்களை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுகிறோம்.
ஏனென்றால் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம்" என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் இத்தொடர் ஒளிபரப்பாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 'சித்தி 2' தொடரில் நடிக்கும் நடிகர்களின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் நடிகை ராதிகா. அப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.