விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களைத் தொடர்ந்து சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைகிறது என்ற தகவலே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தத் தகவல்கள் அனைத்தும் உண்மையாகியுள்ளன. கௌதம் மேனன், சிம்பு இணையும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசை அமைக்கவுள்ளார். இதனால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் சிறந்த கடற்கரை நகரத்தில் முகாமிட்டுள்ள ராஷி கண்ணா!