தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் புகழ்பெற்றவர் நகைச்சுவை நடிகர் ’பிளாக்’ பாண்டி. நடிப்பு, இசை எனப் பன்முகம்கொண்ட பாண்டி, உதவும் மனிதம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பலருக்கும் உதவிகளைச் செய்துவருகிறார்.
அதன்படி, தற்போது 5 மாணவர்களைப் படிக்க வைத்துவரும் பாண்டியையும், அவரது தங்கையையும், நடிகர் சிவக்குமார்தான் படிக்கவைத்துள்ளார். எனவே, அந்த உந்துதலில்தான் தானும் அமைப்பு ஏற்படுத்தி ஏழை மாணவர்களைப் படிக்கவைப்பதாகக் கூறுகிறார்.
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், ”வறுமையில் இருக்கும் ஒருவருக்கு பணம் தந்து உதவுவதைவிட, வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் அந்த வறுமையிலிருந்து அவர்கள் மீள முடியும்" என்றார்.
இதையும் படிங்க: விஷாலின் 'சக்ரா' திரைப்பட விற்பனைக்கு இடைக்காலத் தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு
!