ETV Bharat / sitara

’எதற்காக தினமும் வீடியோ வெளியிடுகிறீர்கள்?’ - ஷிவானியை மடக்கி கேள்வி கேட்ட ஆரி! - பிக்பாஸ் 4

சென்னை : தினமும் எதற்காக நான்கு மணிக்கு வீடியோ வெளியிடுகிறீர்கள் என்று ஷிவானியை, ஆரி மடக்கி கேள்வி கேட்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஷிவானி
ஷிவானி
author img

By

Published : Oct 6, 2020, 10:57 AM IST

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கிய நாளன்றே கலவரத்துடன் முடிந்தது. ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒன்றிணைந்து, ஷிவானியை டார்கெட் செய்யத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் எதிர்பார்த்தது போலவே ஷிவானியை மையப்படுத்தி அனைத்துக் காட்சிகளும் இருந்தன. முதலில் ஷிவானியின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ்கள் குறித்து பெருமையாக சோம் மற்றும் பாலாஜி முருகதாஸ் பேசி அவரை ஊக்கப்படுத்தினர். ஆனால் அதே நேரத்தில் ஷிவானியிடன், ஆரி அதே விஷயத்தை வைத்து மடக்கியுள்ளார்.

”எதற்காக நீங்கள் தினமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு மணிக்கு வீடியோ வெளியிடுகிறீர்கள்? அதை பார்க்கவே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. நீங்கள் என்ன ஆகவேண்டும் என்பதற்காக இதையெல்லாம் செய்கிறீர்கள்?” என்று கேள்வி கேட்கிறார்.

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திணறியபடி ஷிவானி இருக்கும் காட்சியுடன் ப்ரோமோ முடிகிறது. இவர்களை ஷிவானி எப்படி சாமர்த்தியமாக சமாளிக்கிறார் என்பதை இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் காண்போம்.

இதையும் படிங்க: ’வாத்தி கம்மிங்’ - ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கிய பிக்பாஸ் முதல்நாள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.