ETV Bharat / sitara

ஆரம்பமானது 'ஆதலினால் காதல் செய்வீர்' வெப் சீரிஸ்!

'வல்லமை தாராயோ' வெற்றியைத் தொடர்ந்து தற்போது புதிய வெப் சீரிஸ் 'ஆதலினால் காதல் செயவீர்' ஒளிபரப்பை விகடன் நிறுவனம் தனது யூடியூப்பில் தொடங்கியுள்ளது.

Aadhalinaal Kaadhal Seiveer web series
AKS web series
author img

By

Published : Aug 30, 2021, 6:44 PM IST

சென்னை: விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' வெப் சீரிஸ் யூடியூப்பில் ஆரம்பமாகியுள்ளது.

திரைப்படங்களுக்கு இணையாக தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸ்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் புதிய வெப் சீரிஸ் தொடராக 'ஆதலினால் காதல் செய்வீர்' உள்ளது.

120 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸின் முதல் 5 தொடர்கள் ஆக. 23 முதல் விகடன் டெலிவிஸ்டாஸ் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டது.

இதற்கு முன்னதாக விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் பெண் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த ‘வல்லமை தாராயோ’ என்ற வெப் சீரிஸை வெளியிட்டு வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து முற்றிலும் புதிய கதையம்சத்துடன் குறிப்பாக 2K கிட்ஸ் மற்றும் அவர்களது பொழுதுபோக்கு அம்சங்களை குறிவைத்து 'ஆதலினால் காதல் செய்வீர்' வெப் சீரிஸுடன் களம் இறங்கியுள்ளது.

ஆறு பிளாட்டுகளில் அருகருகே வசிக்கும் நண்பர்கள், தங்களது வாழ்க்கையில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்கள், பெற்றோருடனான நிலைப்பாடு, நட்பு, காதல் சிக்கல்கள் மற்றும் தங்களது பலநாள் கனவுகளை நிறைவேற்ற அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என எல்லாம் கலந்த ஒரு கலவையான வெப் சீரிஸாக உருவாகியுள்ளது.

ராஜீவ் கே.பிரசாத் இயக்கியுள்ள இத்தொடரின் திரைக்கதையை வே.கி.அமிர்தராஜ் மற்றும் ஜோ ஜார்ஜ் என இருவர் எழுதியுள்ளனர். இதன் டைட்டில் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.

இதையும் படிங்க: செம்பருத்தி தொடரிலிருந்து திடீரென வெளியேறிய பிரபலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.