இரண்டாவது விருதை இந்தப் படம் வென்றுள்ள நிலையில், தயாரிப்பு வடிவமைப்பாளர் பார்பரா லிங், செட் அலங்காரம் செய்த நான்சி ஹை ஆகியோர் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதை பெற்றனர்
ஆஸ்கர் விருதுகள் 2020 - நான்கு விருதுகளை அள்ளிய கொரிய மொழிப்படம் பாராசைட் - ஆஸ்கர் விருதுகள் 2020 லைவ் அப்டேட்

11:48 February 10
சிறப்பு தயாரிப்பு வடிவமைப்பு விருதை ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் படம் வென்றுள்ளது

11:42 February 10
சிறந்த ஆவணக்குறுப்படத்துக்கான விருதை லேர்ணிங் டு ஸ்கேட்போர்டு இன் ஏ வார்ஸோன் படம் வென்றுள்ளது

ஆஃபகானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் இயங்கி வரும் ஸ்கேடிஸ்தான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைப் பற்றிய படமாக லேர்ணிங் டு ஸ்கேட்போர்டு இன் ஏ வார்ஸோன் அமைந்துள்ளது.
போர் பதற்ற சூழ்நிலையில் இருக்கும் ஆஃபகானிஸ்தானில் பெண்கள் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படாத சூழ்நிலையில், அவர்களுக்கு கற்றல், விளையாட்டு ஆகியவற்றை கற்பித்து வருவது பற்றி இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது.
11:41 February 10
சிறந்த ஆவணப்படமாக அமெரிக்கன் ஃபேக்டரி திரைப்படம் வென்றுள்ளது

ஸ்டீவன் பொக்னர், ஜூலியா ரீச்சர்ட் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அமெரிக்காவின் ஓஹியோ மாகணத்திலுள்ள மொரெயின் நகரில் இயங்கி வ்ந்த மூடப்பட்ட சீன நாட்டு தொழிற்சாலையை பற்றிய படமாக உள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தயாரிப்பில் வெளியான முதல் படமான அமெரிக்கன் ஃபேக்டரி 110 நிமிடங்கள் ஓடக்கூடியாதாக உள்ளது
11:32 February 10
மியூசிக்கல் டிராமா பாணியில் உருவாகியிருந்த ராக்கெட்மேன் படத்தில் இடம்பிடித்த லவ் மீ அகெயின் பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்றுள்ளது.

மேத்யூ மார்கெசன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். கேனஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட ராக்கெட்மேன் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கலக்கியது
10:58 February 10
சிறந்த இசையமைப்புக்கான விருதை ஜோக்கர் திரைப்படம் வென்றுள்ளது

ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹில்தூர் குனாடாட்டிர் என்ற பெண் இசையமைப்பாளர் ஜோக்கர் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இவர் இந்தப் படத்துக்காக பாஃப்டா (பிரிட்டீஷ் அகாதமி விருது), கோல்டன் குளோப் விருது, கிரிட்டிக்ஸ் சாய்ஸ் மூவி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
10:43 February 10
மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற பாராசைட் சிறந்த இயக்குநர் என்ற நான்காவது விருதை வென்றுள்ளது.

நான் இளம் வயதில் சினிமா பற்றி தேடி தேடிப் படித்தபோது ஒருவது பேச்சை என் இதயத்தில் ஆழமாக செதுக்கினேன். அது என்னவென்றால், ஒருவருக்கு மிகவும் தனிப்பட்ட விஷயமாக இருப்பது சிறந்த படைப்பாற்றல் உள்ளவராக இருப்பதுதான் என்ற பேச்சு.
இதைச் சொன்னது அனைவரும் கொண்டாடும் மிகப் பெரிய ஜாம்பவான் இயக்குநர் மார்டின் ஸ்கோர்செஸி என்று ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் பாரசைட் படத்தின் இயக்குநர் போன் ஜூன் ஹோ
10:36 February 10

10:17 February 10
92வது ஆஸ்கர் விருதின் சிறந்த படமாக பாராசைட் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதில் கொரிய மொழிப்படமான பாராசைட் வென்றுள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளர்கள் வாக் சின் மற்றும் போன் ஜூன் ஹோ ஆகியோர் விருதை பெற்றுள்ளனர்.
சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை ஆகிய விருதுகளையும் வென்ற, இந்தப் படம் ஆறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
10:14 February 10
ஜூடி படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த ரெனீ ஜெல்வெகர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

அமெரிக்க பாடகி, நடிகை ஜூடி கார்லாண்ட் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்த ஜூடி படத்தில் கார்லாண்டாக வாழ்ந்திருந்தார் நடிகை ரெனீ ஜெல்வெகர். பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூலை ஈட்டாதபோதிலும் விமர்சக ரீதியாக பாராட்டைப் பெற்றதுடன், ரசிகர்களை படம் வெகுவாகக் கவர்ந்தது.
10:02 February 10
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் படத்தில் ஜோவாகின் பீனிக்ஸ் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் படங்களில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததுடன், வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்த படம் ஜோக்கர். டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் சைக்கலாஜிகல் திரில்லர் படமாக அமைந்திருந்த ஜோக்கர் படத்தில் ஜோவாகின் பீனிக்ஸ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
ஆர்தர் ஃபெலெக், ஜோக்கர் என இருகேரக்டரில் தோன்றி தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்புகுந்தார் பீனிக்ஸ். படம் வெளியானபோது இவரது நடிப்பு பல்வேறு பாரட்டுகள் குவிந்த வண்ணம் இருந்த நிலையில், அப்போதே ஆஸ்கர் விருது கிடைக்கலாம் என்று பேச்சு எழுந்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றுள்ளார் பீனிக்ஸ்.
09:21 February 10
சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை தென் கொரியா திரைப்படம் பாராசைட் வென்றுள்ளது.
ஆஸ்கர் விருது பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விருதாக சிறந்த வெளிநாட்டு படம் பிரிவு அமைந்துள்ளது. ஹாலிவுட்டில் உருவாகும் படம் தவரி பிற நாட்டின் மொழிப் படங்கள் இந்தப் பரிவில் போட்டியிட்டு அதிலிருந்து சிறந்த படம் தேர்வு செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதை கொரியா மொழிப் படம் தட்டிச்சென்றுள்ளது. ஏற்கனவே இந்தப் படம் சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருதை வென்ற நிலையில், தற்போது இரண்டாவது விருதை பெற்றுள்ளது.
09:05 February 10
92வது ஆஸ்கர் விருதில் சிறந்த விஷுவல் எஃபெக்டஸ்கான விருதைப் பெற்று மூன்றாவது விருதை அள்ளியுள்ளது 1917 திரைப்படம்.

குண்டுமழை, ராணுவ வீரர்களின் புல்லட், அவர்கள் சண்டையிடும் போர்க்களம் என 1917 படத்தில் போர்க்காட்சிகளை மிகவும் நேர்த்தியாக விஷுவல் எஃபெக்டஸ் மூலம் உருவாக்கிய கெய்லமி ரோச்சரண், கிரெக் பட்லர் , டொமினிக் தொஹி ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
09:02 February 10
சிறந்த படத்தொகுப்புக்கான விருதை ஃபோர்ட் vs ஃபெராரி திரைப்படத்துக்காக மைக்கேல் மெக்குஸ்கெர் மற்றும் ஆண்ட்ரு பக்லேண்ட் ஆகியோர் வென்றுள்ளனர்.

சாகசம், அதிரடி நிறைந்த ரேஸ் காட்சிகள் மிகவும் நேர்த்தியாக கத்தரித்து பார்வையாளர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தந்தனர் ஃபோர்ட் vs ஃபெராரி படத்தொகுப்பாளர்கள் மைக்கேல் மெகுஸ்கர் மற்றும் ஆண்ட்ரு பக்லேண்ட்.
09:00 February 10
சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை சாம் மென்டிஸ்-இன் 1917 திரைப்படம் வென்றுள்ளது.

முதல் உலகப் போர் களத்தை காட்சி வழியே அப்படியே நம் கண்முன்னே காட்டிய ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் இந்த விருதைச் தட்டிச்சென்றுள்ளார். 1917 திரைப்படம் சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய இரண்டு விருதுகளை வென்றுள்ளது.
08:56 February 10
சிறந்த சவுண்ட் மிக்ஸிங்குக்கான விருதை சாம் மென்டிஸ் இயக்கித்தில் வெளியாகியிருக்கும், முதல் உலகப்போர் பின்னணி 1917 வென்றுள்ளது.

92வது ஆஸ்கர் விருதில் நான்கு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்ட இந்தப் படம் தற்போது சிறந்த சவுண்ட் மிக்ஸிங்
விருதைச் தட்டிச்சென்றுள்ளது.
08:53 February 10
ஃபோர்ட் vs ஃபெராரி படத்துக்காக சிறந்த சவுண்ட் எடிட்டிங் விருதை வென்றுள்ளார் டெனால்டு சில்வெஸ்டர்

ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான ஃபோர்ட் vs ஃபெராரி-இல் கிறிஸ்டியன் பேல், மேட் டெமான் பிரதான கேரக்டரில் நடித்திருப்பார்கள்.
இரண்டு ரேஸ் கார் டிசைனர்களுக்கிடையே நிகழும் புதிய கார் வடிவமைப்பு, போட்டியை மையமாக வைத்து அமைந்திருந்த ஃபோர்ட் vs ஃபெராரி பல்வேறு சாஹச காட்சிகளுடன் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
08:47 February 10
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை டைகா வெய்டிடி ஜோஜோ ராபிட் படத்துக்காக வென்றுள்ளார்.

நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த இயக்குநர், நடிகரான டைகா வெய்டிடி, எழுத்தாளர் கிறிஸ்டின் லியூனன்ஸ் எழுதிய கேஜிங் ஸ்கைஸ் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஜோஜோ ராபிட் என்ற காமெடி படத்துக்கு திரைக்கதை எழுதி, இயக்கினார்.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜெர்மனியில் ஹிட்லரின் இளைஞர் பட்டாளத்தில் வாழ்ந்து வரும் ஜோஜோ என்ற 10 வயது சிறுவனின் வாழ்க்கையில் நிகழும் சுவாரஸ்ய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஜோஜோ ராபிட் படம் அமைந்துள்ளது.
08:39 February 10
சிறந்த காஸ்ட்யூப் டிசைனுக்கான விருதை லிட்டின் உமன் படத்துக்காக பிரட்டான் காஸ்ட்யூம் டிசைனர் ஜாக்குலின் டுர்ரன் வென்றுள்ளார்.

1850களில் நடக்கும் பிரியட் திரைப்படமாக வெளிவந்த லிட்டின் உமன் படத்தில் ஐந்த பெண்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்கள் அனைவரின் தோற்றமும் ஒருவருக்கொருவர் வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும் அமையும் விதமாக காஸ்ட்யூம் டிசைன் செய்திருந்த ஜாக்குலின் டுர்ரன் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றுள்ளார்.
08:13 February 10
சிறந்த துணை நடிகைக்கான விருதை லாரா டெர்ன் வென்றுள்ளார். லிட்டில் உமன், மேரேஜ் ஸ்டார் ஆகிய இரு படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருதை வென்றுள்ளார்.
-
#Oscars Moment: @LauraDern wins Best Supporting Actress for @MarriageStory. pic.twitter.com/g8cn8KoRMo
— The Academy (@TheAcademy) February 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Oscars Moment: @LauraDern wins Best Supporting Actress for @MarriageStory. pic.twitter.com/g8cn8KoRMo
— The Academy (@TheAcademy) February 10, 2020#Oscars Moment: @LauraDern wins Best Supporting Actress for @MarriageStory. pic.twitter.com/g8cn8KoRMo
— The Academy (@TheAcademy) February 10, 2020
வாழ்கையில் நீங்கள் உங்களது ஹீரோக்களை சந்திக்க முடியாது என்று சிலர் கூறுவார்கள். ஆனால் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அந்த ஹீரோவாக உங்களது பெற்றோர்களே அமைவார்கள் என்று ஆஸ்கர் விருது வென்ற பின்னர் லாரா உருக்கமாக பேசியுள்ளார்.
செயோர்சா ரொனன், எம்மா வாட்சன், ஃபுளோரன்ஸ் பக், எலிசா ஸ்கேன்லன் ஆகியருடன் லாரா டெர்ன் நடித்திருக்கும் லிட்டில் உமன் பீரியட் படமாக வெளியாகியுள்ளது. லிட்டில் உமன் என்ற நாவல் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இதேபோல் ஸ்கார்லெட் ஜான்சன், ஆடாம் டிரைவர் நடித்துள்ள மேரேஜ் ஸ்டோரி படத்தில் வழக்கறிஞர் கேரக்டரில் தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்துக்காகவும் அவருக்கு சிறந்த துணை நடிகை விருது வழங்கப்பட்டுள்ளது.
07:55 February 10
சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருதை ஹேர் லவ் திரைப்படம் வென்றுள்ளது.

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஆப்பரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட தந்தை தனது மகளுக்கு அழகாக முறையில் தலைமுடியை அலங்காரம் செய்த்து மகிழ்ச்சிபடுத்தும் கதையம்சத்தில் 6 நிமிடம் ஓடும் குறும்படமாக ஹேர் லவ் படம் அமைந்துள்ளது.
07:42 February 10
சிறந்த ஒரிஜினல் திரைக்கதைகான விருதை பாராசைட் திரைப்படத்துக்காக திரைக்கதாசிரியர்கள் போங் ஜூன் ஹோ மற்றும் ஹன் ஜின் வன் ஆகியோர் வென்றுள்ளனர்.

தென் கொரியா நாட்டு பிளாக் காமெடி திரில்லர் திரைப்படமான பாரசைட் வெறும் 13 மில்லியன் அமெரிக்க டாலர்களில் உருவாகி 150 மில்லயன் அமெரிக்க டாலருக்கு மேல் வசூலித்தது.
சிறந்த கொரிய திரைப்படமாக புகழப்பட்ட இந்தப் படம் தற்போது ஆஸ்கர் விருதை தட்டிசென்றுள்ளது.
07:34 February 10
சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் பிராட் பிட் ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் படத்துக்காக வென்றுள்ளார். இந்த விருதை பெறுவதற்கு காரணமாக இருந்த படத்தின் இயக்குநர் குவேண்டின் டாரண்டினோ, கதாநாயகன் லியணார்டோ டிக்காப்ரியோ உள்ளிட்ட படக்குழுவினர்களுக்கு தனது நன்றியைத் தெரிவத்தார் பிராட் பிட்.
-
#Oscars Moment: Brad Pitt wins Best Supporting Actor for @OnceInHollywood pic.twitter.com/TSGjMB3v8P

">#Oscars Moment: Brad Pitt wins Best Supporting Actor for @OnceInHollywood pic.twitter.com/TSGjMB3v8P
— The Academy (@TheAcademy) February 10, 2020#Oscars Moment: Brad Pitt wins Best Supporting Actor for @OnceInHollywood pic.twitter.com/TSGjMB3v8P

06:57 February 10
கடந்த ஆண்டு ஜுன் மாதம் வெளியான டாய் ஸ்டாரி 2 திரைப்படம் 200 மில்லியன் அமெரிக்க டாலரில் உருவாகி பாக்ஸ் ஆபிஸில் 1000 மில்லியன் அமெரிக்க டாலர்களை வரை வசூலித்து சாதனை புரிந்தது. வால்ட் டிஸ்னி பிக்ஸர்ஸ் மற்றும் பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்த தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜோஸ் கூலே இயக்கியுள்ளார். படத்தின் பிரதான கேரக்டராக தோன்று ஊடி-க்கு ஹாலிவுட் முன்னணி நடிகர் டாம் ஹேங்க்ஸ் குரல் கொடுத்திருப்பார்.

உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 92வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்று வருகிறது.

Oscar award 2020 - Live Update
Conclusion: