ETV Bharat / sitara

பிரபல நடிகையிடம் இருந்து போதைப்பொருள்கள் பறிமுதல் - நடிகையிடம் இருந்து போதை பொருட்கள் பறிமுதல்

பெங்களூரு: கன்னட நடிகை அனிகாவிடம்  இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களை போதைப் பொருள்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

போதைப் பொருட்கள்
போதைப் பொருட்கள்
author img

By

Published : Aug 27, 2020, 7:45 PM IST

கன்னடத்தில் பல படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் நடிகை அனிகா. கல்யாண் நகர் ராயல் சூட்ஸ் குடியிருப்பில் வசிக்கும் இவரிடம் போதைப் பொருள்கள் இருப்பதாக போதைப் பொருள்கள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் அங்கிருந்து 145 எம்.டி.எம்.ஏ, 180 எல்.எஸ்.டி மாத்திரைகள், ரூபாய் இரண்டு கோடிக்கு மேற்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, கன்னடத் திரையுலகில் பிரபல நட்சத்திரங்களுக்கும் பாடகர்களுக்கும் போதைப்பொருள்களை வழங்கியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது அவர்களில் பலருக்கு வாடிக்கையாக வழங்கி அவர்களை வாடிக்கையாளர் ஆகவும் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து போதைப் பொருள்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்து பெங்களூருவில் இருக்கும் தங்களது அலுவலகத்தில் வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவரின் வாடிக்கையாளராக மேலும் பல பிரபலங்கள் இருக்கலாம் என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.