ETV Bharat / sitara

"தேன்" - விருதை குறிவைத்து ஒரு தமிழ் சினிமா! - தமிழ்சினிமாவின் புதியப்படங்கள்

நாம் அன்றாடம் செய்திகளில் பார்க்கும் படிக்கும் விஷயங்களை திரைக்கதையின் உள்ளே இணைத்து கோர்த்த 'தேன்' பட இயக்குநரின் புத்திசாலிதனம்.

thean
thean
author img

By

Published : Dec 15, 2020, 3:40 PM IST

தேனி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஊர் தான் குறிஞ்சிக்குடி. அதிகபட்சம் நூறு பேர் கூட இல்லாத ஊரில் வாழுந்து வருகிறார் தாய் தந்தை இல்லாத வேலு. மலையில் ஏறி தேன் எடுப்பதுதான் பிரதான தொழிலாக இருந்தாலும் அங்குள்ள சின்ன சின்ன வேலைகளையும் செய்து வருகிறார். பக்கத்து ஊரை சேர்ந்தவர் பூங்கொடி. தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் மருந்துக்காக தேன் வேண்டும் என்பதற்காக வேலுவை சந்திக்கிறார். அடுத்தடுத்த சந்திப்புகளில் வேலுவை பூங்கொடி திருமணமும் செய்துகொள்கிறார்.

ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. அதே நேரத்தில் மலைப்பகுதியில் இருக்கும் மக்களை எல்லாம் கீழே சென்று வாழுமாறு அரசு எச்சரிக்கிறது. ஆனால் அதை வேலுவும் அப்பகுதி மக்களும் மறுக்கிறார்கள். இந்நிலையில் பூங்கொடிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். பூங்கொடிக்கு என்ன ஆனது? நோயில் இருந்து உயிர் பிழைத்தாரா? மக்கள் மலையை விட்டு நகரில் குடியேறினார்களா என்பதை மிகவும் உணர்ச்சிகரமாக சொல்லியுள்ளார் இயக்குநர் கணேஷ் விநாயகம்.

thean
தேன் பட போஸ்டர்
அம்பலவாணன்,பிரேமா இணைந்து தனது ஏபி புரொடக்ஷன் நிறுவனத்தில் தயாரித்துள்ள இந்த படத்தை கணேஷ் விநாயகம் இயக்கியுள்ளார். கணேஷ் விநாயகம் ஏற்கனவே 'தகராறு', 'வீரசிவாஜி' உள்ளிட்ட கமர்ஷியல் படங்களை எடுத்தவர்.ஆனால் இதில் மலைவாழ் மக்களின் வாழ்வியலை எந்தவொரு சினிமாத்தனமும் இல்லாமல் அழகாக கண்முன் காட்டியுள்ளார்.
மேற்குதொடர்ச்சிமலையில் இருக்கும் ஒரு சிறிய ஊரையும் அதில் உள்ள மக்கள் என சிறிய அளவிலான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு அனைவரையும் நன்றாக வேலை வாங்கியுள்ளார். ஹூரோ தருண்குமார் குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும், தகராறு உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்தவர் இதில் பிரதான கதாநாயகனாக நடித்துள்ளார். தனது இயல்பான அனுபவ நடிப்பின் மூலம் சில இடங்களில் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறார்.
ஹீரோயினாக அபர்ணதி. தனியார் தொலைக்காட்சியில் ஆர்யா பங்கேற்ற எங்கவீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவரும் தனக்கு அளிக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளார். இவர்களுடன் சூப்பர்குட் லட்சுமணன், அருள்தாஸ் ஆகியோரும் தனது வழக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். மகளாக நடித்துள்ள பேபி அனுஶ்ரீ வாய்பேச முடியாத காதுகேட்காத கேரக்டரில் நெகிழ வைத்துள்ளார். ஒளிப்பதிவு சுகுமார். இவருக்கு சொல்லவே தேவையில்லை. பிரபுசாலமனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான இவர் 'மைனா', 'கும்கி' போன்றே இப்படத்திலும் தேனி மலையின் அழகியலை படம்பிடித்து நம்கண்களுக்கு விருந்தளித்துள்ளார். ஒவ்வொரு காட்சியின் நேர்த்தியும் இவரது கைவண்ணத்தால் பளிச்சிட்டுள்ளது.
எடிட்டிங் லாரன்ஸ் கிஷோர், கத்தரியை தேவையான இடங்களில் கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார். ரயில் பெட்டிகளை போல திரைக்கதை அடுத்தடுத்து பயணிக்க இவரின் எடிட்டிங் உழைத்துள்ளது. பாடல்கள் அதிகம் இல்லை என்றாலும் சனத் பரத்வாஜின் பின்னணி இசை தேவையான இடங்களில் மௌனமாக ஒலித்து பார்வையாளர்களின் என்ன ஓட்டத்துடன் பயணித்த மாதிரி ஒரு இசை கோர்வையாக இருந்தது. படத்தின் முக்கிய ப்ளஸ் வசனம்தான்.
தேனி வட்டார வழக்கு மொழியை அப்படியே பதிவு செய்யதுள்ளார்கள். ராசி தங்கதுரையின் வசனங்கள் ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை படத்திலேயே பிரமாதமாக இருந்தது. இதிலும் அரசை கேள்வி கேட்பது போன்ற வசனங்களும் லட்சுமணன் கேரக்டர் மூலமாக காமெடி கலந்த ஊசியாக வசனங்கள் அப்படியே உள்ளே இறங்குகிறது. அரசின் அவலங்களை வசனங்கள் மூலம் சவுக்கடியாக தந்துள்ளார். தரையில் வாழும் மக்களையே அந்த பாடுபடுத்தும் அரசு நிர்வாகம் மலைவாழ் மக்களையும் சும்மா விட்டுவிடுமா என்ன என்ற கேள்வி எழுப்பி அது அப்படி அவர்களை கசக்கி பிழிகிறது என்பதை உண்மை சம்பவத்தின் தழுவலில் தோலுறித்துள்ளார் இயக்குனர்.
நாம் அன்றாடம் செய்திகளில் பார்க்கும் படிக்கும் விஷயங்களை திரைக்கதையின் உள்ளே கோர்த்த விதம் இயக்குநரின் புத்திசாலித்தனம். ஆம்புலன்ஸ் இல்லாமல் தனது மனைவியின் சடலத்தை பல கிமீ தூரம் சுமந்து சென்ற கணவர் என்று நாம் பார்த்து கேட்ட செய்தியை கதையாக எழுதி அதற்கு ஒரு அழகான களம் அமைத்து அதில் கார்ப்பரேட் கம்பெனி, சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் திரியும் போலி ஆட்கள் அரசு அதிகாரிகளின் ஏழை மக்கள் மீதான அலட்சிய பார்வை மற்றும் அதிகார திமிர் உள்ளிட்டவற்றை கோர்த்து ஒரு தரமான படைப்பாக எடுத்துள்ளார் இயக்குனர் கணேஷ் விநாயகம்.
"தேன்" ஏற்கனவே பல்வேறு விருது நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஏராளமான விருதுகளை வென்ற இப்படம் நிச்சயம் இன்னும் பல விருதுகளை வெல்லப்போவது உறுதி.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.